போலி பணி நியமன உத்தரவு தயாரித்துஆசிரியரிடம் ரூ.3.40 லட்சம் மோசடி

Added : செப் 22, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்:- ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் தனியார் பள்ளி ஆசிரியர் வீரச்சாமியிடம் 40, மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன உத்தரவு வழங்கி ரூ.3.40 லட்சத்தை மோசடி செய்த 4 பேரை போலீசார் தேடுகின்றனர். வீரச்சாமி கமுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது நண்பர் பேரையூர் ஊராட்சி செயலர் ரமேஷ் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பரமக்குடி

ராமநாதபுரம்:- ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் தனியார் பள்ளி ஆசிரியர் வீரச்சாமியிடம் 40, மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி நியமன உத்தரவு வழங்கி ரூ.3.40 லட்சத்தை மோசடி செய்த 4 பேரை போலீசார் தேடுகின்றனர்.
வீரச்சாமி கமுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது நண்பர் பேரையூர் ஊராட்சி செயலர் ரமேஷ் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பரமக்குடி பிரபாகரன், மனைவி இந்துமதி, சொர்ணகுமார், ஆல்பிரட் பிராங்ளின் அறிமுகமாயினர். இவர்கள் வீரச்சாமியிடம் ரூ.6 லட்சம் கொடுத்தால் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவாக கூறினர்.
அதை நம்பி பல தவணைகளாக இந்துமதி வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அனுப்பினார். இதற்காக ரூ.100 பத்திரத்தில் வீரச்சாமி எழுதி வாங்கினார்.மின் வாரியம் பெயரில் போலி பணி நியமன உத்தரவு தயாரித்து கூரியரில் வீரச்சாமிக்கு அனுப்பினர். இதனால் பணத்தை மீட்டுத்தரக் கோரி எஸ்.பி., தங்கத்துரையிடம் புகார் அளித்தார்.எஸ்.பி., உத்தரவின்படி பிரபாகரன், இந்துமதி, சொர்ணகுமார், ஆல்பிரட் பிராங்களின் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X