திருவொற்றியூர் - மணலி மேம்பால பணி மந்தம்ஆபத்தை உணராமல் அத்துமீறும் வாகன ஓட்டிகள்

Added : செப் 22, 2022 | |
Advertisement
திருவொற்றியூர், :திருவொற்றியூர் - மணலியை இணைக்கும் வகையில், கட்டப்பட்டு வரும் மேம்பால பணி மந்தமடைந்துள்ளதால், அரைகுறை மேம்பாலத்தில் ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள், அத்துமீறி பயணித்து வருகின்றனர்.திருவொற்றியூர் - மணலியை இணைக்கும் வகையில், திருவொற்றியூர் குப்பை கிடங்கு அருகே, பகிங்ஹாம் கால்வாய் மீது, பழமையான தரைப்பாலம் இருந்தது. மணலியைச் சேர்ந்தவர்கள் திருவொற்றியூர்,
திருவொற்றியூர் - மணலி மேம்பால பணி மந்தம்ஆபத்தை உணராமல் அத்துமீறும் வாகன ஓட்டிகள்

திருவொற்றியூர், :திருவொற்றியூர் - மணலியை இணைக்கும் வகையில், கட்டப்பட்டு வரும் மேம்பால பணி மந்தமடைந்துள்ளதால், அரைகுறை மேம்பாலத்தில் ஆபத்தை உணராத வாகன ஓட்டிகள், அத்துமீறி பயணித்து வருகின்றனர்.திருவொற்றியூர் - மணலியை இணைக்கும் வகையில், திருவொற்றியூர் குப்பை கிடங்கு அருகே, பகிங்ஹாம் கால்வாய் மீது, பழமையான தரைப்பாலம் இருந்தது. மணலியைச் சேர்ந்தவர்கள் திருவொற்றியூர், ஆர்.கே., நகர் உள்ளிட்ட சென்னையின் மைய பகுதி களுக்கு செல்ல இவ்வழியை பயன்படுத்தினர்.
தரைப்பாலம் பலவீனமடைந்ததால், 42 கோடி ரூபாய் செலவில், 530 மீட்டர் நீளத்தில், புதிய மேம்பாலம் கட்டும் பணி, 2017ல் துவங்கி நடந்து வருகிறது. பல்வேறு காரணங்களால், மேம்பாலப்பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், சாய்தளம் அமைக்கும் பணி துவங்கவில்லை.மேம்பால கட்டுமான பணி காரணமாக, திருவொற்றியூரில் இருந்து மணலி செல்ல வேண்டியவர்கள், திருவொற்றியூர் குப்பைமேடு, வெற்றி விநாயகர் நகர், ராஜாஜி நகர், கார்கில் நகர், சத்திய மூர்த்தி நகர், மணலி விரைவு சாலை, எம்.எப்.எல்., சந்திப்பு, சி.பி.சி.எல்., சந்திப்பு வழியாக பல கிலோமீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை தொடர்கிறது.

இதனிடையே, அரைகுறை மேம்பாலத்தின் சாய்தளப்பகுதியில், மணல்மேடு அமைக்கப்பட்டு, தற்காலிகமாக, இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டது.தற்போது, சாய்தளம் அமைக்கும் பணிக்காக மீண்டும் அவ்வழி மூடப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் தடுப்புகளை மீறி, மீண்டும் அந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மேம்பால கட்டுமான பணி அதிகாரி கூறியதாவது:சாய்தளத்திற்கான குவாரி மண் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே, மேம்பால பணிகளில் தாமதம் ஏற்பட்டது.தற்போது, அது சரி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளன. ஜனவரி மாதத்திற்குள் மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X