மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த ரூ.550 கோடி ஒதுக்கீடு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தகவல்

Added : செப் 22, 2022 | |
Advertisement
மதுரை:''மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த, மத்திய அரசு, 550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.மதுரையில் பா.ஜ., சார்பில் பல்துறை வல்லுனர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மத்திய அமைச்சர் முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மாநில மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி
மதுரை விமான நிலையத்தை மேம்படுத்த ரூ.550 கோடி ஒதுக்கீடு பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தகவல்

மதுரை:''மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த, மத்திய அரசு, 550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது,'' என, பா.ஜ., தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசினார்.

மதுரையில் பா.ஜ., சார்பில் பல்துறை வல்லுனர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மத்திய அமைச்சர் முருகன், தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், மாநில மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

மக்களுக்கு சமூக, பொருளாதார அதிகாரம் அளிக்கும் பயணத்தில் பா.ஜ., செயல்படுகிறது. தற்போது பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்ற சுமுகமான சூழல் நிலவுகிறது.இதனால் இந்தியாவுக்கான அன்னிய முதலீடு, 35 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், தமிழகமும் அன்னிய முதலீடை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜி.எஸ்.டி., வரிவிதிப்புக்கு முன் லாரி டிரைவர்கள் நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது நாடு முழுதும் வர்த்தகம் தடையின்றி நடக்கிறது. வரி ஏய்ப்பும் குறைந்துள்ளது.சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி, 35 சதவீதத்தில் இருந்து, 58 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இத்தனை வளர்ச்சியும் கொரோனா தொற்றுக்கு பிறகே நடந்துள்ளது.நாட்டில் தீவிர வறுமை, 1 சதவீதமாக உள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், 10 சதவீதமாக குறைந்துள்ளனர்.


தீவிர முயற்சி



மதுரை விமான நிலைய மேம்பாட்டிற்கு, 550 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் தரம் உயர்த்த, 633 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.அதே சமயம் தமிழக அரசு, 543 ஏக்கர் நிலம் தான் இதுவரை தந்துள்ளது. இருப்பினும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக தரம் உயர்த்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.மதுரையில், 'எய்ம்ஸ்' மருத்துவ மனை அமைக்க, 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான, 95 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன.

மருத்துவ, 'சீட்'களின் எண்ணிக்கை, 100ல் இருந்து, 150 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 134 கோடி ரூபாய்க்கு தொற்றுநோய் தடுப்பு பிரிவு ஏற்படுத்த உள்ளது. விரைவில் கட்டுமானம் முடிந்து பிரதமர் மோடி திறந்து வைப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X