கூடலுார்:கூடலுார் சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில், பெண்களுக்கான உணவு மற்றும் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.அதில், மையத்தின் கள அலுவலர் குமாரவேல் தலைமை வகித்து பேசுகையில், ''இயற்கை உணவுகளை உண்பதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்க முடியும். மலை காய்களை வீட்டு தோட்டத்தில் உற்பத்தி செய்து உண்பது ஆரோக்கியமானது. மேலும், காய்கறிகளை மஞ்சள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்,''என்றார். காய்கறிகள், பயிர் வகைகளின் மருத்துவ குணங்கள் குறித்து தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் விளக்கினார். முகாமில், ஆர்.கே., அறக்கட்டளை நிர்வாகி லீலாகிருஷ்ணன் மற்றும் 90 பெண்கள் இரு குழுக்களாக பங்கேற்றனர்.