கல்லுாரி மாணவர்கள்ரயிலில் அட்டகாசம்

Added : செப் 22, 2022 | |
Advertisement
பெரம்பூர், சென்னை சென்ட்ரலில் இருந்து, நேற்று முன் தினம் மாலை, அரக்கோணத்திற்கு சென்ற ரயிலில், கல்லுாரி மாணவர்கள் பயணித்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் புறப்பட்ட போது, படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். ஒரு மாணவர், பட்டாக்கத்தியை, நடைமேடையில் உரசியபடி கூச்சலிட்டார். அதை தொடர்ந்து மற்ற மாணவர்களும் கூச்சலிட்டனர்.அதனால்



பெரம்பூர், சென்னை சென்ட்ரலில் இருந்து, நேற்று முன் தினம் மாலை, அரக்கோணத்திற்கு சென்ற ரயிலில், கல்லுாரி மாணவர்கள் பயணித்தனர். ஆவடி அடுத்த பட்டாபிராம் இந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் இருந்து, ரயில் புறப்பட்ட போது, படிகட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். ஒரு மாணவர், பட்டாக்கத்தியை, நடைமேடையில் உரசியபடி கூச்சலிட்டார். அதை தொடர்ந்து மற்ற மாணவர்களும் கூச்சலிட்டனர்.

அதனால் மற்ற பயணியர் அச்சமடைந்தனர். அந்த காட்சிகளை, அங்கு ரயிலுக்காக காத்திருந்த மற்ற பயணியர் மொபைல் போனில் படம் பிடித்தனர். அந்த படம், நேற்று காலை, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்து ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரகளையில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீடியோ காட்சி மூலம், அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

செங்குன்றம், பேருந்து நிலையம் அருகே உள்ள, சைதை தாலுகா வேளாண்மை உற்பத்தி வளாகத்தில், நேற்று காலை, 8:00 மணியளவில், சென்னை பச்சையப்பன் மற்றும் அம்பேத்கர் கல்லுாரி மாணவர்கள் மோதிக்கொண்டனர்.தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்ற போது, பெரியபாளையம் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆறு மாணவர்கள் சிக்கினர். அவர்களை எச்சரித்து, 'இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்' என, எழுதி வாங்கிக்கொண்டு, பெற்றோருடன் அனுப்பினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X