நிலுவை வாடகை செலுத்த கால அவகாசம் ஊட்டி நகராட்சி கமிஷனர் தகவல்

Added : செப் 22, 2022 | |
Advertisement
ஊட்டி:ஊட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வாடகை பாக்கியை நவ., இறுதிக்குள் செலுத்த வியாபாரிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில், 1,600 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடந்த, 2016 ஆண்டு முதல், வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டது. இதனை வியாபாரிகள் செலுத்தாமல் இருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் சில மாதங்களுக்கு முன், 16 கோடி

ஊட்டி:ஊட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை வாடகை பாக்கியை நவ., இறுதிக்குள் செலுத்த வியாபாரிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில், 1,600 கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு கடந்த, 2016 ஆண்டு முதல், வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு உயர்த்தப்பட்டது. இதனை வியாபாரிகள் செலுத்தாமல் இருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பின் சில மாதங்களுக்கு முன், 16 கோடி ரூபாய் வசூலானது.
தற்போது, மீதமுள்ள நிலுவை தொகையை வசூலிக்க, மார்க்கெட் கண்காணிப்பு அலுவலர் நஞ்சுண்டன் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவை நகராட்சி நிர்வாகம் நியமித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, வாடகை செலுத்தாத, 53 கடைகளுக்கு ' சீல்' வைக்கப்பட்டது.இந்நிலையில், நிலுவை வாடகை செலுத்த கால அவகாசம் கேட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு வரை வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று நடந்த பேச்சுவார்த்யைில் வியாபாரிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கமிஷனர் காந்திராஜ் கூறுகையில்,''நிலுவை வாடகை பாக்கி, 24 கோடி ரூபாய் நவ., இறுதிக்குள் செலுத்த வியாபாரிகளுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான தொகை படிப்படியாக கட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் கடைகளுக்கு'சீல்' வைக்கப்படும். மேலும், நடப்பாண்டு செலுத்த வேண்டிய, 7 கோடி ரூபாய் வாடகையை மட்டும் பிப்., இறுதி வரை செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X