சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியம்அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்

Added : செப் 22, 2022 | |
Advertisement
குன்னுார்:குன்னுார் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், ஓசோன் படலம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் வைரமணி தலைமை வகித்து பேசுகையில்,''சுற்றுச்சூழல் பாதிப்புகளால், பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அவசியம். உலகளாவிய ஓசோன் பாதிப்பை தவிர்க்க, அனைவரின் ஒத்துழைப்பு மட்டுமே

குன்னுார்:குன்னுார் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், ஓசோன் படலம் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் வைரமணி தலைமை வகித்து பேசுகையில்,''சுற்றுச்சூழல் பாதிப்புகளால், பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதால், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அவசியம். உலகளாவிய ஓசோன் பாதிப்பை தவிர்க்க, அனைவரின் ஒத்துழைப்பு மட்டுமே மாற்றத்திற்கான சாத்தியம்,''என்றார்.தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் தங்கமணி கூறுகையில்,''சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவியர் முன் உதாரணமாக செயல்பட வேண்டும்,''என்றார்.குன்னுார் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் கூறுகையில்,''உலகளாவிய ஓசோன் பாதிப்பை தவிர்க்க ஒவ்வொருவரின் முயற்சியும் முக்கியம். உள்ளூரில் இயற்கை அழிப்பால், தாவரங்களின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது. குன்னுார் போன்ற நிலச்சரிவு அபாய பகுதிகளில் இயற்கைக்கு பாதகம் இல்லாத வாழ்க்கை முறைகளை, இளம் தலைமுறையினர் கற்பது அவசியம்,''என்றார். ஆசிரியர் ரோஸ்லின் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X