லோன் ஏஜென்ட்டால் கர்ப்பிணி உயிரிழப்பு: மஹிந்திரா பைனான்ஸ்க்கு கட்டுப்பாடு!

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
ஜார்கண்ட் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் மஹிந்த்ரா பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் வசூல் ஏஜென்ட், விவசாயி ஒருவரது டிராக்டரை பறிமுதல் செய்து சென்ற போது தடுக்க வந்த அவரது கர்ப்பிணி மகள் டிராக்டரில் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆர்.பி.ஐ., அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளி ஆட்கள் மூலம் கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என மஹிந்திரா பைனாஸ்க்கு
MahindraFinance, RBI, LoanAgent, லோன்ஏஜென்ட்

ஜார்கண்ட் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் மஹிந்த்ரா பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் வசூல் ஏஜென்ட், விவசாயி ஒருவரது டிராக்டரை பறிமுதல் செய்து சென்ற போது தடுக்க வந்த அவரது கர்ப்பிணி மகள் டிராக்டரில் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆர்.பி.ஐ., அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளி ஆட்கள் மூலம் கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என மஹிந்திரா பைனாஸ்க்கு உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநில கிராமம் ஒன்றை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி விவசாயி மித்திலேஷ் மேத்தா. இவரின் டிராக்டரை, மஹிந்த்ரா பைனான்ஸ் சார்பில் கடன் வசூல் செய்யும் ஊழியர் செப்., 15 அன்று பறிமுதல் செய்ய முயன்றிருக்கிறார். விவசாயியின் 3 மாத கர்ப்பிணி மகள் அதனை தடுக்க போராடியுள்ளார். அப்போது டிராக்டர் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராம மக்கள் கொதித்து போய் உள்ளனர்.


latest tamil news


மகள் இறப்பு குறித்து தந்தை மித்திலேஷ் கூறுகையில், “கடன் வசூல் செய்யும் நபர் டிராக்டரை வலுக்கட்டாயமாக பறித்துச் செல்ல முயன்றார். நான் கடனை திருப்பிச் செலுத்திவிடுவேன் என கெஞ்சினேன். ஆனால் வழிவிடவில்லை என்றால் டிராக்டர் ஏற்றி நசுக்கி விடுவேன் என்றார். அதனை செய்தும் விட்டார். என் கண் முன்னே மகள் மீது இரு சக்கரங்களும் ஏறி இறங்கின. எனக்கு அரசிடமிருந்து இழப்பீடோ அல்லது வேறெந்த பலனோ தேவையில்லை. எனது மகளுக்கு நீதி மட்டுமே வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்.” என்றார்.

இந்நிலையில் ஆர்.பி.ஐ., வெளியிட்ட அறிவிப்பில்: மஹிந்திரா நிதி நிறுவனம் அடுத்த உத்தரவு வரும் வரை, அவுட்சோர்சிங் ஏற்பாடுகள் மூலம் கடன் வசூலில் ஈடுபடக்கூடாது. அவுட்சோர்சிங் செயல்பாடுகளை நிர்வகிப்பது தொடர்பாக மஹிந்திரா நிதி நிறுவனத்தில் காணப்பட்ட சில கவலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சொந்த ஊழியர்கள் கடன் வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202215:49:00 IST Report Abuse
ஆரூர் ரங் மகேந்திராவும் டெபாசிட்களை வாங்கி அதற்கு வட்டி கொடுக்கிறார்கள். அதனால் கொடுத்த கடன் திரும்பி🤫 வராவிட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும் ?டெபாசிட் போட்டவர்கள் யாராவது வட்டி வேண்டாம் என்று சொல்வார்களா? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?
Rate this:
23-செப்-202217:02:26 IST Report Abuse
அப்புசாமி.........
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
23-செப்-202217:20:10 IST Report Abuse
chakra.......
Rate this:
A.SENTHILKUMAR - Neyveli,இந்தியா
28-செப்-202212:54:35 IST Report Abuse
A.SENTHILKUMAR//மகேந்திராவும் டெபாசிட்களை வாங்கி அதற்கு வட்டி கொடுக்கிறார்கள். அதனால் கொடுத்த கடன் திரும்பி🤫 வராவிட்டால் அவர்களால் என்ன செய்ய முடியும் ?டெபாசிட் போட்டவர்கள் யாராவது வட்டி வேண்டாம் என்று சொல்வார்களா? அவர்களுக்கு என்ன பதில் சொல்வது?// 1000 கோடி 2000 கோடின்னு கடன் வாங்கிட்டு வெளிநாட்டுக்கு ஓடிப்போய்விடுறானுகளே அந்த பணத்துக்கெல்லாம் யாரும் வட்டி கேட்கமாட்டாங்களோ ?...
Rate this:
Cancel
நல்லவன் - chennai,இந்தியா
23-செப்-202213:14:43 IST Report Abuse
நல்லவன் கூட்டாளிங்களோட சாயம்மே இப்பத்தான் வெளுக்க தொடங்கியிருக்கிறது, தேர்தலுக்குள்ள எப்படியும் Gand Leader ரோட சாயமும் வெளுத்துடும்.
Rate this:
Cancel
neo - Nagercoil,இந்தியா
23-செப்-202211:16:04 IST Report Abuse
neo அம்பானிக்கும், அதானிக்கும், கொடுக்கும் கடன்களை இதே பாணியில் வசூல் செய்ய முடியுமா, தள்ளுபடிதான் பண்ணமுடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X