லோன் ஏஜென்ட்டால் கர்ப்பிணி உயிரிழப்பு: மஹிந்திரா பைனான்ஸ்க்கு கட்டுப்பாடு!| Dinamalar

லோன் ஏஜென்ட்டால் கர்ப்பிணி உயிரிழப்பு: மஹிந்திரா பைனான்ஸ்க்கு கட்டுப்பாடு!

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (16) | |
ஜார்கண்ட் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் மஹிந்த்ரா பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் வசூல் ஏஜென்ட், விவசாயி ஒருவரது டிராக்டரை பறிமுதல் செய்து சென்ற போது தடுக்க வந்த அவரது கர்ப்பிணி மகள் டிராக்டரில் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆர்.பி.ஐ., அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளி ஆட்கள் மூலம் கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என மஹிந்திரா பைனாஸ்க்கு
MahindraFinance, RBI, LoanAgent, லோன்ஏஜென்ட்

ஜார்கண்ட் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் மஹிந்த்ரா பைனான்ஸ் நிறுவனத்தின் கடன் வசூல் ஏஜென்ட், விவசாயி ஒருவரது டிராக்டரை பறிமுதல் செய்து சென்ற போது தடுக்க வந்த அவரது கர்ப்பிணி மகள் டிராக்டரில் நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து ஆர்.பி.ஐ., அடுத்த அறிவிப்பு வரும் வரை வெளி ஆட்கள் மூலம் கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என மஹிந்திரா பைனாஸ்க்கு உத்தரவிட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநில கிராமம் ஒன்றை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி விவசாயி மித்திலேஷ் மேத்தா. இவரின் டிராக்டரை, மஹிந்த்ரா பைனான்ஸ் சார்பில் கடன் வசூல் செய்யும் ஊழியர் செப்., 15 அன்று பறிமுதல் செய்ய முயன்றிருக்கிறார். விவசாயியின் 3 மாத கர்ப்பிணி மகள் அதனை தடுக்க போராடியுள்ளார். அப்போது டிராக்டர் அவர் மீது ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராம மக்கள் கொதித்து போய் உள்ளனர்.


latest tamil news


மகள் இறப்பு குறித்து தந்தை மித்திலேஷ் கூறுகையில், “கடன் வசூல் செய்யும் நபர் டிராக்டரை வலுக்கட்டாயமாக பறித்துச் செல்ல முயன்றார். நான் கடனை திருப்பிச் செலுத்திவிடுவேன் என கெஞ்சினேன். ஆனால் வழிவிடவில்லை என்றால் டிராக்டர் ஏற்றி நசுக்கி விடுவேன் என்றார். அதனை செய்தும் விட்டார். என் கண் முன்னே மகள் மீது இரு சக்கரங்களும் ஏறி இறங்கின. எனக்கு அரசிடமிருந்து இழப்பீடோ அல்லது வேறெந்த பலனோ தேவையில்லை. எனது மகளுக்கு நீதி மட்டுமே வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்.” என்றார்.

இந்நிலையில் ஆர்.பி.ஐ., வெளியிட்ட அறிவிப்பில்: மஹிந்திரா நிதி நிறுவனம் அடுத்த உத்தரவு வரும் வரை, அவுட்சோர்சிங் ஏற்பாடுகள் மூலம் கடன் வசூலில் ஈடுபடக்கூடாது. அவுட்சோர்சிங் செயல்பாடுகளை நிர்வகிப்பது தொடர்பாக மஹிந்திரா நிதி நிறுவனத்தில் காணப்பட்ட சில கவலைகளை அடிப்படையாகக் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சொந்த ஊழியர்கள் கடன் வசூல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X