பெருமாள் கோவில்களில் புரட்டாசி திருவிழா

Added : செப் 22, 2022 | |
Advertisement
அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில், நாளை புரட்டாசி திருவிழா நடக்கிறது.அன்னுார் அருகே உள்ள மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. மேலத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வரும் பல ஆயிரம் பக்தர்கள் பெருமாளை தரிசிப்பர்.இக்கோவிலில் கடந்த, 17ம் தேதி

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், பெருமாள் கோவில்களில், நாளை புரட்டாசி திருவிழா நடக்கிறது.அன்னுார் அருகே உள்ள மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. மேலத் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து வரும் பல ஆயிரம் பக்தர்கள் பெருமாளை தரிசிப்பர்.இக்கோவிலில் கடந்த, 17ம் தேதி முதல் சனிக்கிழமை உற்சவம் நடந்தது. நாளை அதிகாலை 4:00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. இதையடுத்து அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சியும், 8:00 மணிக்கு கருட வாகனத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக வெங்கடேச பெருமாள் உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. புரட்டாசி திருவிழாவை முன்னிட்டு, அன்னுார், மேட்டுப்பாளையம், புளியம்பட்டி மற்றும் அவிநாசியில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்னுார் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை அதிகாலை 4:00 மணிக்கு, திருமஞ்சனமும், இதையடுத்து 5:30 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது.குன்னத்துார் புத்துார் பெருமாள் கோவிலில், ஸ்ரீ தேவி பூதேவி உடனமர் நாராயணமூர்த்திக்கும் ஆஞ்சநேயருக்கும் காலை 8:30 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. காட்டம்பட்டி ஊராட்சி, வரதையம்பாளையத்தில் பெருமாள் கோவிலில் அதிகாலையில் கரி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X