பக்தர்கள் மீது வழக்கு ஏன்? டி.ஆர்.ரமேஷ் தரப்பினர் விளக்கம்!

Added : செப் 22, 2022 | |
Advertisement
சென்னை:ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பின் நிறுவனர், டி.ஆர்.ரமேஷ் மீது, சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஆக., 31ம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த கூட்டம் தொடர்பாக, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் மீது, கோவிலில் அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளின்

சென்னை:ஆலய வழிபடுவோர் சங்கம் என்ற அமைப்பின் நிறுவனர், டி.ஆர்.ரமேஷ் மீது, சென்னை மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆக., 31ம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த கூட்டம் தொடர்பாக, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் மீது, கோவிலில் அனுமதியின்றி கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, டி.ஆர்.ரமேஷ் தரப்பினர் கூறியதாவது:டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட ஆன்மிக ஆர்வலர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹிந்து சமய அறநிலையத் துறையின் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுத்து வருகின்றனர். இதில், டி.ஆர்.ரமேஷ் மட்டும், 17 வழக்குகள் தொடுத்து உள்ளார்.

சமீபத்தில் சட்டசபையில், 1,000 கோடி ரூபாய்க்கான புதிய கட்டுமான திட்டங்கள் அறிவிக்கப் பட்டன. ஹிந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, அவ்வாறு சட்டசபையில் அறிவித்து, நிதியை செலவழிக்க முடியாது. இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் நடவடிக்கையில், டி.ஆர்.ரமேஷ் ஈடுபட்டுள்ளார்.

மயிலாப்பூர் கோவிலில் கூட்டம் நடந்த அன்று, அவர் குடும்ப நிகழ்வுக்காக, பெங்களூரில் இருந்தார்.அப்படி இருந்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், அவரது நடவடிக்கைகளை முடக்கவே இந்த முயற்சி என்று சந்தேகிக்கிறோம். இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X