பள்ளிகளில் ஆண்டாய்வு

Added : செப் 22, 2022 | |
Advertisement
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் 31 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆண்டு தோறும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு செய்வது வழக்கம். ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை, கல்வித் தரம், கற்பித்தல் முறை சிறப்பாக இருக்கிறதா, இலவச சைக்கிள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைகிறதா, மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் 31 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஆண்டு தோறும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆண்டாய்வு செய்வது வழக்கம்.

ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை, கல்வித் தரம், கற்பித்தல் முறை சிறப்பாக இருக்கிறதா, இலவச சைக்கிள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் மாணவர்களை சென்றடைகிறதா, மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளைவிக்க கூடிய திறந்த வெளி கிணறு, பாழடைந்த கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்புவது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆண்டாய்வு பணிகள் நடைபெறவில்லை.

இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில தினங்களுக்கு முன்பு ஆண்டாய்வு பணிகள் துவங்கியது. இதில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உதவியாக வேறு பள்ளிகளில் இருந்தும் ஆசிரியர்கள் சென்று ஆய்வு செய்வார்கள்.கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட இப்பணிகள் தற்போது துவங்கியுள்ளது. 2015 முதல் ஆய்வு நடக்காத சில பள்ளிகளும் உள்ளன, என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X