எக்ஸ்குளுசிவ் செய்தி

தி.மு.க.,வில் மா.செ.,தேர்தல் துவக்கம் :அமைச்சர்களை எதிர்க்க ஆளில்லை

Updated : செப் 22, 2022 | Added : செப் 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
தி.மு.க.,வில் மாவட்டச் செயலர்கள் தேர்தல் நேற்று துவங்கியது. அமைச்சர்களை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை.தி.மு.க.,வில் மாவட்டச் செயலர்கள் தேர்தல் நேற்று துவங்கியது; வரும் 25ம் தேதி நிறைவு பெறுகிறது. மூத்த அமைச்சர்கள் சிலர், நீண்ட காலமாக அப்பொறுப்பில் உள்ளனர். அவர்கள் குறு நில மன்னர்களாகவே செயல்படுகிற அளவுக்கு, மாவட்டச் செயலர் பதவி அதிகாரமிக்கதாக
தி.மு.க.,வில் மா.செ.,தேர்தல் துவக்கம் :அமைச்சர்களை எதிர்க்க ஆளில்லை

தி.மு.க.,வில் மாவட்டச் செயலர்கள் தேர்தல் நேற்று துவங்கியது. அமைச்சர்களை எதிர்த்து போட்டியிட யாரும் முன்வரவில்லை.தி.மு.க.,வில் மாவட்டச் செயலர்கள் தேர்தல் நேற்று துவங்கியது; வரும் 25ம் தேதி நிறைவு பெறுகிறது.

மூத்த அமைச்சர்கள் சிலர், நீண்ட காலமாக அப்பொறுப்பில் உள்ளனர். அவர்கள் குறு நில மன்னர்களாகவே செயல்படுகிற அளவுக்கு, மாவட்டச் செயலர் பதவி அதிகாரமிக்கதாக உள்ளது.மாவட்டச் செயலருடன் அவைத் தலைவர், துணைச் செயலர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என, 12 பதவிகளுக்கும் சேர்த்து, தேர்தல் நடத்தப்படுகிறது.


தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை, ௧,௦௦௦ ரூபாய் செலுத்தி பெற வேண்டும். பின், 12 பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர் தலா, 25 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். மாவட்டச் செயலர் பதவிக்கு போட்டியிடுவோர், தன் ஆதரவாளர்கள் போட்டியிடும் 12 பதவிகளுக்கும் சேர்த்து பணம் கட்ட வேண்டும் என்பதால், மொத்தமாக 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.

அதன்படி 72 மாவட்டங்களுக்கும் தலா ஒருவர் அல்லது இருவர், மூவர் என, பலமுனைப் போட்டி ஏற்பட்டால், பல கோடி ரூபாய் வரை வசூலாகும் வாய்ப்பு உள்ளது.துாத்துக்குடி தெற்கு - அனிதா ராதாகிருஷ்ணன், வடக்கு - கீதா ஜீவன்; விருதுநகர் தெற்கு - ராமச்சந்திரன், வடக்கு - தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி - மனோ தங்கராஜ் ஆகிய மாவட்ட செயலர் பதவிக்கு அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை, தேனி, திருநெல்வேலி என, 19 மாவட்டங்களுக்கு நேற்று மனுக்கள் தாக்கல் செய்தனர். அத்துடன் கட்டுக்கட்டாக பணத்தையும் செலுத்தினர். அமைச்சர்களுக்கு எதிராக யாரும் மனுத் தாக்கல் செய்ய முன்வரவில்லை. மனுக்களை, தி.மு.க., துணை பொதுச்செயலர் ஆ.ராஜா, முதன்மை செயலர் நேரு, அமைப்புச் செயலர் பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை தேனாம் பேட்டை அறிவாலயத்தில் பெற்றனர். - நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-செப்-202215:50:39 IST Report Abuse
ஆரூர் ரங் குறுநில மன்னர்களை எதிர்த்தால் அண்ணன் தம்பி என்று கூட பார்க்க மாட்டார்கள். அப்புறம் தற்காப்புக்கு ஸ்ரீராமஜெயம் எழுத வேண்டியதுதான்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-செப்-202213:13:21 IST Report Abuse
duruvasar போட்டி போட்டு விட்டு திரும்பி ஊருக்கு போக ஆசையில்லாதவன் தான் முன்வருவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X