கோவைக்கு பல்வேறு திட்டங்கள்ஜெர்மன் தொழில்நுட்ப குழு 'ரெடி'

Added : செப் 22, 2022 | |
Advertisement
கோவை:பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுடன் கோவைக்கு பல்வேறு திட்டங்களையும் செய்துதர தயாராக இருப்பதாக, ஜெர்மன் தொழில்நுட்ப குழு விருப்பம் தெரிவித்துள்ளது.ஜெர்மன் நாட்டு துரிங்கியா மாநிலத்தின் பொருளாதாரம், அறிவியல் மற்றும் டிஜிட்டல் சமூக அமைச்சர் வொல்ப்கேங்க் டைபென்ஸி, பெடரல் ரிபப்ளிக் ஆப் ஜெர்மனியின் கன்சல் ஜெனரல் மைக்கேலே குச்லர் மற்றும் ஏழு பேர் அடங்கிய
கோவைக்கு பல்வேறு திட்டங்கள்ஜெர்மன் தொழில்நுட்ப குழு 'ரெடி'

கோவை:பயிற்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றுடன் கோவைக்கு பல்வேறு திட்டங்களையும் செய்துதர தயாராக இருப்பதாக, ஜெர்மன் தொழில்நுட்ப குழு விருப்பம் தெரிவித்துள்ளது.ஜெர்மன் நாட்டு துரிங்கியா மாநிலத்தின் பொருளாதாரம், அறிவியல் மற்றும் டிஜிட்டல் சமூக அமைச்சர் வொல்ப்கேங்க் டைபென்ஸி, பெடரல் ரிபப்ளிக் ஆப் ஜெர்மனியின் கன்சல் ஜெனரல் மைக்கேலே குச்லர் மற்றும் ஏழு பேர் அடங்கிய தொழில்நுட்ப குழுவினர், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், கமிஷனர் பிரதாப் உடன் கலந்துரையாடினர். அப்போது, வொல்ப்கேங்க் டைபென்ஸி பேசியதாவது:துருங்கியா நகரில் மனிதவளம் மிகவும் குறைவாக உள்ளது. அதேசமயம், பயிற்சி தரும் திறன் அதிகம் இருக்கிறது.
எனவே, கோவையில் உள்ள கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் உடன், எங்கள் பல்கலையை ஒருங்கிணைத்து, பயிற்சியாளர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்த முடியும்.கோவை மாநகராட்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் தேர்ச்சி பெற்றவர்களை, ஜெர்மனியில் ஆறு மாத ஜெர்மன் மொழி, கலாசாரம் பற்றி இலவசமாக பயிற்சி கொடுத்த பின்னர், அங்குள்ள தொழிற்சாலைகளில் ஐந்தாண்டு கால பயிற்சியுடன், வேலை வாய்ப்பும் அளிக்க விரும்புகிறோம்.
கோவை தொழில்முனைவோரை தேர்வு செய்து மானியம் வழங்கவும், பயிற்சி அளித்து மேம்படுத்துவதுடன், பல்வேறு திட்டங்களை கோவைக்கு செய்து தரவும் தயாராக உள்ளோம். இதனால், இந்தியா-ஜெர்மன் இரு நாடுகளும் பயன்பெறும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, விக்டோரியா ஹாலை குழுவினர் பார்வையிட்டனர். மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X