துணை கலெக்டர் பதவி உயர்வுக்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 23, 2022 | |
Advertisement
மதுரை:துணை கலெக்டர்கள் பதவி உயர்வு தற்காலிக பட்டியலுக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு பணி நியமனமும் வழக்கின் இறுதி உத்தரவிற்கு கட்டுப்பட்டது எனக்கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை புதுார் திருநாவுக்கரசு தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நில ஆர்ஜித தாசில்தாராக பணிபுரிகிறேன். வருவாய்த்துறை சார்பில் துணை

மதுரை:துணை கலெக்டர்கள் பதவி உயர்வு தற்காலிக பட்டியலுக்கு எதிரான வழக்கில் எந்த ஒரு பணி நியமனமும் வழக்கின் இறுதி உத்தரவிற்கு கட்டுப்பட்டது எனக்கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை புதுார் திருநாவுக்கரசு தாக்கல் செய்த மனு: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நில ஆர்ஜித தாசில்தாராக பணிபுரிகிறேன். வருவாய்த்துறை சார்பில் துணை கலெக்டர், தாசில்தார், துணைத்தாசில்தார் பதவி உயர்வுக்கான தற்காலிக பட்டியல் தயாரிக்க கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. இதனால் எனக்கு துணை கலெக்டர் பதவி உயர்விற்கு பாதிப்பு ஏற்படும்.​​
2004-2020 வரையிலான பதவி உயர்வு பட்டியலை மறுபரிசீலனை செய்யாமல், தற்காலிக பட்டியல் தயாரிக்கின்றனர். மிக பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றி துணை கலெக்டர், தாசில்தார், துணைத் தாசில்தார் பதவி உயர்வு நிரந்தர பட்டியல் அடிப்படையில் வழங்க வேண்டும். தற்காலிக பட்டியல் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசு மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்: எந்த ஒரு பணி நியமனமும் இவ்வழக்கின் இறுதி உத்தரவிற்கு கட்டுப்பட்டதாக அமையும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி நவ.,4 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X