கலவை இயந்திரம் மீது அரசு பஸ் மோதல் கட்டட தொழிலாளிகள் 3 பேர் பலி; 7 பேர் காயம் உளுந்துார்பேட்டை அருகே சோகம்

Added : செப் 23, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, கான்கிரீட் கலவை இயந்திரம் இழுத்துச் சென்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளிகள் மூவர் இறந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மயிலங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 50; அரசு பஸ் டிரைவர். நேற்று மாலை திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ்சை
கலவை இயந்திரம் மீது அரசு பஸ் மோதல் கட்டட தொழிலாளிகள் 3 பேர் பலி; 7 பேர் காயம் உளுந்துார்பேட்டை அருகே சோகம்

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை அருகே, கான்கிரீட் கலவை இயந்திரம் இழுத்துச் சென்ற டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கட்டட தொழிலாளிகள் மூவர் இறந்தனர்; ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மயிலங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 50; அரசு பஸ் டிரைவர். நேற்று மாலை திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு அரசு பஸ்சை ஓட்டி வந்தார். இரவு 7:00 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் ஆற்று பாலத்தின் மீது பஸ் சென்று கொண்டிருந்தது.
முன்னால் செங்குறிச்சியில் இருந்து திருநாவலுார் நோக்கி சென்று கொண்டிருந்த, ஜெனரேட்டருடன் கூடிய கான்கிரீட் கலவை இயந்திரத்தை இழுத்துச் சென்ற டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் இருந்த கட்டுமான தொழிலாளிகள் திருநாவலுார் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், 25; நாவலேரியாள், 45; இறந்தனர்.
கான்கிரீட் கலவை வாகனத்தில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ரேவதி, 35; மகேஸ்வரி, 40; வெற்றிவேல், 25; நாகராஜன், 36; அரசு பஸ்சில் பயணம் செய்த சுப்ரமணி, 67; கார்த்திமணி, 65; முத்து, 45; கண்டக்டர் கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை குமார், 57, உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர். திருநாவலுார் போலீசார் வந்து, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சை பெற்ற மதிவாணன் மனைவி ரேவதி இறந்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X