திருப்புவனத்தில் மின்சாரம் துண்டிப்பு; வியாபாரம் பாதிப்பதாக புகார்

Added : செப் 23, 2022 | |
Advertisement
திருப்புவனம் : திருப்புவனத்தில் அதிகாரிகள் திட்டமிடல் இன்றி அலட்சியமாக மின்சாரத்தை துண்டித்ததால் பொதுமக்களும் வியாபாரிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.திருப்புவனத்தில் வேலை நாட்கள், வாரச்சந்தை நாட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது என பலமுறை கோரிக்கை விடுத்தும் நேற்று முன்தினம் மின்சாரத்தை துண்டித்து மின்வாரியம் பணிகளை மேற்கொண்டது. இதனால் சந்தைக்கு வந்த

திருப்புவனம் : திருப்புவனத்தில் அதிகாரிகள் திட்டமிடல் இன்றி அலட்சியமாக மின்சாரத்தை துண்டித்ததால் பொதுமக்களும் வியாபாரிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.

திருப்புவனத்தில் வேலை நாட்கள், வாரச்சந்தை நாட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது என பலமுறை கோரிக்கை விடுத்தும் நேற்று முன்தினம் மின்சாரத்தை துண்டித்து மின்வாரியம் பணிகளை மேற்கொண்டது. இதனால் சந்தைக்கு வந்த கிராமமக்கள் சிரமப்பட்டனர். பாக்யா நகரில் புதிய டிரான்ஸ்பார்மர் பணிக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வியாபாரிகள் கூறுகையில்: சந்தை நாட்களில் சுற்று வட்டார கிராமமக்கள் பலரும் கோதுமை, மிளகாய், அரிசி உள்ளிட்டவற்றை அரைப்பதுடன், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி செல்வார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சென்றனர். பராமரிப்பு பணியின் போதே டிரான்ஸ்பார்மர் பணிகளையும் மேற் கொள்ளலாம். இரு நாட்கள் பகல் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் சிரமம் ஏற்பட்டது, என்றனர். வரும் நாட்களில் அலட்சியமாக இல்லாமல், திட்டமிடலுடன் மாதாந்திர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X