சூப்பர் ரிப்போர்டர்

Added : செப் 23, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை: குப்பை மேடான நீர் வரத்து ஓடை, செயல்படாத ஆர்.ஓ., பிளான்ட், எரியாத தெரு விளக்குகளால் அருப்புக்கோட்டை நகராட்சி8 வது வார்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை நகராட்சி 8வது வார்டை சேர்ந்தது பாரதி நகர். இங்கு விக்னேஸ்வரா நகர் மற்றும் 8 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்தப் பகுதியில் மழை நீர் வரத்து ஓடை செல்கிறது. இதன் வழியாக மழை நீர்

அருப்புக்கோட்டை: குப்பை மேடான நீர் வரத்து ஓடை, செயல்படாத ஆர்.ஓ., பிளான்ட், எரியாத தெரு விளக்குகளால் அருப்புக்கோட்டை நகராட்சி8 வது வார்டு மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

அருப்புக்கோட்டை நகராட்சி 8வது வார்டை சேர்ந்தது பாரதி நகர். இங்கு விக்னேஸ்வரா நகர் மற்றும் 8 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்தப் பகுதியில் மழை நீர் வரத்து ஓடை செல்கிறது. இதன் வழியாக மழை நீர் சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தெப்பத்திற்கு சென்றடையும். ஓடையை சரிவர பராமரிப்பு செய்யாமல் விட்டதால் புதர்கள், மரங்கள் வளர்ந்தும் இந்த பகுதியில் உள்ளவர்கள் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் கேந்திரமாக மாறிவிட்டது. இந்தப் பகுதியில் உள்ள தெருக்களில் அனைத்திலும் பகல் இரவு பாராது கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. டெலிபோன் ரோட்டில் இருந்து பாரதி நகருக்கு வரும் மெயின் ரோடு இரவு நேரங்களில் குடிமகன்களின் 'பார்' ஆக செயல்படுகிறது.

இரவு 8:00 மணிக்கு மேல் இந்தப் பகுதியில் பெண்கள் வர பயப்படுகின்றனர். தெரு விளக்குகள் இல்லாததால், இருட்டை பயன்படுத்தி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். போலீசார்கள் இரவு நேரத்தில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும். மெயின் ரோடு வழியாக ஒன்றாவது தெருவுக்கு திரும்பும் வழியில் போடப்பட்டுள்ள சிறு பாலம் மோசமாக உள்ளது.பாலம் அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே சேதமடைந்து விட்டது. இங்கு லட்சக்கணக்கில் செலவழித்து அமைக்கப்பட்ட 'ஆர்வோ பிளான்ட்' காட்சி பொருளாக உள்ளது. தெருக்களில் குப்பை வாங்க நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வருவது இல்லை. இதனால் குப்பையை ஓடைகளில் கொட்டுகின்றனர்.

ஜவஹர் சங்கம் வடக்கு தெரு உட்பட தெருக்களில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இவற்றை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை நீர் வரத்து ஓடையில் வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகளை நேரடியாக விடுகின்றனர். இதனால் இந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.


ஓடையை தூர்வார வேண்டும்


ராஜேந்திரன், ஓய்வு கண்டக்டர், (ஓய்வு) : பாரதி நகர் பகுதியில் உள்ள பிரதான ஓடை சுகாதார கேடாக உள்ளது. நகராட்சியினர் ஓடையின் ஒரு பகுதியை துப்புரவு செய்துள்ளனர். மறுபகுதி செடிகள், மரங்கள் முளைத்து புதர்காடாக உள்ளது. இவற்றையும் அகற்றி ஓடையில் மழை நீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கொசு தொல்லை


சரவணன், கடைகாரர்: எங்கள்பகுதியில் கொசு தொல்லை தாங்க முடியவில்லை. வீட்டில் எந்த நேரமும் கதவுகளை பூட்டியே வைக்க வேண்டி உள்ளது. அருகில் ஓடையில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் கொசுக்கள் உற்பத்தியாக வசதியாக உள்ளது. கொசு மருந்து, கொசு புகை அடிக்க துப்புரவு பணியாளர்கள் வரவேண்டும்.


வளர்ச்சிப்பணிகள் வேண்டும்


சண்முகபாண்டியன், தனியார் ஊழியர் : பாரதி நகர் பகுதியில் ஒரு சில தெருக்களில் தெரு விளக்குகள் இல்லை. விக்னேஸ்வரா நகரில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள ஆர்வோ பிளான்ட் செயல்படாமல் உள்ளது. அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். துப்புரவு பணியாளர்கள் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குப்பைகளை வாங்க வர வேண்டும்.


நடவடிக்கை எடுக்கப்படும்


சிவபிரகாசம், கவுன்சிலர் : மழைநீர் வரத்து ஓடையின் மறுபகுதி விரைவில் தூர்வாரப்பட்டு, மழை நீர் செல்ல வழி செய்யப்படும். தெரு விளக்குகள் அமைக்கப்படும். துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை தினமும் வாங்க அறிவுறுத்தப்படும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X