மாவட்டத்தில் ப்ளூ வைரஸ் காய்ச்சல்; விருதுநகரில் மட்டும் 17 பாதிப்பு

Added : செப் 23, 2022 | |
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வேகமாக ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வரும் சூழலில் வரும் சூழலில், சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாவட்டம் முழுவதும் பருவமழை சீதோஷ்ண காரணத்தால் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பரவி வரும் ப்ளூ காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விருதுநகரில் நேற்று 17 பேர் ப்ளூ வைரஸ்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் வேகமாக ப்ளூ வைரஸ் காய்ச்சல் பரவி வரும் சூழலில் வரும் சூழலில், சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் குழுக்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் பருவமழை சீதோஷ்ண காரணத்தால் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் பரவி வரும் ப்ளூ காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விருதுநகரில் நேற்று 17 பேர் ப்ளூ வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதா கூறியதாவது: ஒவ்வொரு வட்டாரத்திற்கும் 3 நடமாடும் குழுக்கள் அமைத்து தினசரி 4 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதே போல் பள்ளி சிறார்களுக்கான நடமாடும் குழுக்களும் வட்டாரத்திற்கு 2 வீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. அவ்வாறு கண்டறியும் பட்சத்தில் உடனடியாக சுகாதகாரத்துறையின் குழுக்கள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கும். ஒரு வட்டாரத்திற்கு 12 முகாம்கள் வரை நடக்கிறது, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X