அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

Added : செப் 23, 2022 | |
Advertisement
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை காந்தி நகர் சந்திப்பில் அ.தி.மு.க., சார்பாக, செம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மரணம் அடைந்த வழக்கில், தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும், இறந்தவரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதற்கு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன் தலைமை
அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை காந்தி நகர் சந்திப்பில் அ.தி.மு.க., சார்பாக, செம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று மரணம் அடைந்த வழக்கில், தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும், இறந்தவரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கக் கோரியும், அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் யோக வாசுதேவன் தலைமை வகித்து பேசுகையில், "செம்பட்டி இளைஞர் மரணம் குறித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அவரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் அரசு வழங்க வேண்டும். தினமலர் நாளிதழை அவதுாறாக பேசிய தி.மு.க.,கவுன்சிலரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. போலீசார்களை ஏவி விடுவதும், பத்திரிகையாளர்களை மிரட்டும் இந்த தி.மு.க, அரசு விரைவில் காணாமல் போய்விடும்" என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நகர செயலர் சக்திவேல், நரிக்குடி ஒன்றிய செயலாளர் பூமிநாதன், திருச்சுழி ஒன்றிய செயலாளர் முனியாண்டி, நகர இலக்கிய அணி செயலாளர் சீனிவாசகம், அமைப்புசாரா ஓட்டுநர் சங்க செயலர் மோகன்வேல், எம்ஜிஆர் மன்ற தலைவர் ராமர், நிர்வாகிகள் சவுண்டையா, பொன்ராம், கலுசுவலிங்கம், ராஜப்பன், தலைமை கழக பேச்சாளர் சம்சுதீன் கலந்து கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X