நகராட்சியில் குப்பை அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு| Dinamalar

நகராட்சியில் குப்பை அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு

Added : செப் 23, 2022 | |
பன்றிகளால் தொல்லைபொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே, குடியிருப்பு பகுதிகளுக்குள் பன்றிகள் சுற்றித்திரிவதால், சுகாதாரம் பாதித்துள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விஜயா, பொள்ளாச்சி.ரோடு படுமோசம்வால்பாறை காமராஜர் நகரில், நெடுஞ்சாலை துறை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பல முறை புகார்
நகராட்சியில் குப்பை அகற்றாததால் சுகாதாரம் பாதிப்பு


பன்றிகளால் தொல்லை



பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே, குடியிருப்பு பகுதிகளுக்குள் பன்றிகள் சுற்றித்திரிவதால், சுகாதாரம் பாதித்துள்ளது. குடியிருப்புக்கு மத்தியில் பன்றி வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- விஜயா, பொள்ளாச்சி.


ரோடு படுமோசம்


வால்பாறை காமராஜர் நகரில், நெடுஞ்சாலை துறை ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. பல முறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, ரோட்டை புதுப்பித்து மக்களின் பயணத்தை எளிதாக்க வேண்டும்.- சந்திரன், வால்பாறை.


போக்குவரத்து பாதிப்பு


வால்பாறை நகராட்சி அலுவலகம் முன் பயணியர் நிழற்கூரை இல்லாத நிலையில், பஸ்சை நடுரோட்டில் நிறுத்தி பயணியரை ஏற்றிச் செல்வதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பஸ்களை ஓரமாக நிறுத்த அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.- விமல், வால்பாறை.


குப்பை குவிப்பு


பொள்ளாச்சி ஆர்.ஆர்., தியேட்டர் ரோடு, பாலகோபாலபுரம் வீதியின் பின்பக்கத்தில், பல இடங்களில் குப்பை ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதாரம் பாதிக்கிறது. குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜசேகரன், பொள்ளாச்சி.


மது விற்பனையால் தொல்லை


ஆனைமலை, குளத்துப்புதுார் அருகே பல இடங்களில் சட்ட விரோதமாக 'சில்லிங்' மது விற்பனை நடப்பதால், அதிகாலை நேரமே 'குடி'மகன்கள் போதையேற்றி கொண்டு, வேலைக்குச்செல்வதில்லை. மேலும், பொது இடங்களில் போதையில் தகராறு செய்கின்றனர்.- ராமசாமி, குளத்துப்புதுார்.


ஊரே நாறிப்போச்சு!


பொள்ளாச்சி,புளியம்பட்டி, ராசக்காபாளையம் பகுதிகளில், பல்லடம் ரோட்டோரம் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், கடும் துர்நாற்றம் நிலவுகிறது. ஊராட்சி நிர்வாகத்தினர் குப்பையை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும்.- பாண்டியராஜ், புளியம்பட்டி.


கழிப்பிடம் பராமரிப்பில்லை


ஆனைமலை, கம்பாலபட்டி பூவலப்பருத்தி கிராமத்தில், கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. விரைவில், ஊராட்சி நிர்வாகத்தினர், கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.- காளிமுத்து, கம்பாலபட்டி.


அபராதம் விதிக்கணும்!


பொள்ளாச்சிநகராட்சி அலுவலகம் அருகே, பாலக்காடு ரோட்டில் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், விபத்துகள் ஏற்படுகின்றன. அத்துமீறி வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதித்து, கட்டுப்படுத்த வேண்டும்.- தீபன், பொள்ளாச்சி.


தொடரும் விபத்துக்கள்


பொள்ளாச்சி, லாரிப்பேட்டை ரோடு பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர்.- ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X