தாவரவியல் பூங்கா திறப்பால் மகிழ்ச்சி

Added : செப் 23, 2022 | |
Advertisement
வால்பாறை:சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, நகராட்சி சார்பில் வால்பாறை நகரில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லமும், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்காவும் அமைக்கும் பணி நடந்தது.ஆனால், ஆட்சி
தாவரவியல் பூங்கா திறப்பால் மகிழ்ச்சி

வால்பாறை:சுற்றுலா பயணியர் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில், படகு இல்லம், தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, நகராட்சி சார்பில் வால்பாறை நகரில், 4.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் படகு இல்லமும், 5.6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாவரவியல் பூங்காவும் அமைக்கும் பணி நடந்தது.ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கட்டி முடிக்கப்பட்ட பூங்கா, படகுஇல்லம் இது வரை திறக்கப்படவில்லை. இதனால், மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் வீணாவதோடு, உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் விரக்தியடைந்துள்ளனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, நேற்று காலை நகராட்சி சார்பில் கட்டப்பட்ட தாவரவியல் பூங்கா பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணியர் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.பூங்காவை தாசில்தார் விஜயகுமார், நகராட்சி கமிஷனர் பாலு ஆகியோர் முன்னிலையில் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி திறந்து வைத்தார். விழாவில், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


திட்டமிடல் இல்லை


வால்பாறையில், நீண்ட இழுபறிக்கு பின், தாவரவியல் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. ஆனால் பூங்காவுக்குள் செல்ல நுழைவு கட்டணமோ, கண்காணிக்க பணியாளர்களோ நியமிக்கப்படவில்லை.நகராட்சி தலைவரிடம் கேட்ட போது, ''இரண்டு மாதம் வரை பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பதில்லை. பூங்காவை மேலும் அழகு படுத்திய பின், கட்டணம் நிர்ணயித்து வசூலிப்பது என, மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X