பழங்குடியின மக்களின் குடியிருப்புகளில்...நிம்மதி போச்சுங்க! அரசின் அலட்சியத்துக்கு அவலமே சாட்சி

Added : செப் 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள, பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக உள்ளதால், அனுதினமும் மக்கள் உயிரை பணயம் வைத்து வாழ்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரக காப்புக்காடு பகுதியில், 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பழங்குடியினர்
 பழங்குடியின மக்களின் குடியிருப்புகளில்...நிம்மதி போச்சுங்க! அரசின் அலட்சியத்துக்கு அவலமே சாட்சி


ஆனைமலை:ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள, பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் வசிப்பதற்கு லாயக்கற்றதாக உள்ளதால், அனுதினமும் மக்கள் உயிரை பணயம் வைத்து வாழ்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில், பொள்ளாச்சி, டாப்சிலிப், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி ஆகிய வனச்சரக காப்புக்காடு பகுதியில், 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பழங்குடியினர் வசிக்கும், 48 கிராமங்களும் உள்ளன. இவற்றில், 2,350 வீடுகளில், 7,600க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.ஆழியாறு சின்னாறுபதி, புளியங்கண்டி, டாப்சிலிப், கோழிகமுத்தி, பழைய சர்க்கார்பதி, தம்மம்பதி, நாகரூத்து, சுள்ளிமேட்டுப்பதி உள்பட, பல கிராமங்களில், 30 ஆண்டுகளுக்கு முன், அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன.இதில், சில கிராமங்களில் சொற்ப அளவில் 'சோலார்' தெருவிளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர், கழிப்பிடம், மின் வசதி என, எவ்வித அடிப்படை வசதியும் இல்லை.அனைத்து பழங்குடியின கிராமங்களிலும், இதுவரையில் அரசு சார்பில், வீடுகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. இதனால், பழங்குடியின கிராமங்களில் திரும்பிய திசையெல்லாம், சேதடைந்து உடைந்து விழுந்த வீடுகள் அதிகளவில் உள்ளன.கான்கிரீட் மேற்கூரையுடன் கட்டப்பட்ட வீடுகளில், கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, பக்கவாட்டு சுவர்கள் விரிசல்களுடன் காணப்படுகின்றன. கான்கிரீட் மேற்கூரை, சிமென்ட் 'ஷீட்', தகர 'ஷீட்' மேற்கூரைகளில், மழைநீர் கசிவதால் நிம்மதி இழந்துள்ளனர். இந்நிலையில், சொந்த செலவில், தார்பாலின் 'ஷீட்' வாங்கி வீட்டின் மேற்கூரையில் அமைத்துள்ளனர்.வீடுகளை புதுப்பிக்க வலியுறுத்தி, 30 ஆண்டுகளாக அனைத்து மட்டத்திலும் மனு கொடுத்தும் ஏமாற்றமடைந்துள்ளனர். மழை காலம் துவங்குவதால், விரைவில் வீடுகளை புதுப்பிக்கவும், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க, கோவை மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள, 2,350 வீடுகளில், 80 சதவீதம் வீடுகள் இடித்து, மக்கள் வசிக்க லாயக்கற்ற நிலையில் உள்ளன. சிதிலமடைந்த வீடுகளில் அனுதினமும் உயிரை பணயம் வைத்து பழங்குடியினர் வாழ்கின்றனர்.ஒவ்வொரு நாளும், ஏதாவது ஒரு வீட்டில் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து மக்கள் காயமடைவது தொடர்கதையாக உள்ளது. அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஒரு நாள் பழங்குடியினர் வீட்டில் வாழ்ந்து பார்த்தால், அவர்களின் இன்னல்கள் புரியும்.கடந்த மாதம், புளியங்கண்டியில் தொகுப்பு வீட்டின் கான்கிரீட் உதிர்ந்ததில், குழந்தையுடன் உறங்கிய பெண் படுகாயமடைந்தார். சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை, பேரூராட்சியினர் வீடுகளை புதுப்பித்துத்தருவதாக உறுதியளித்தனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.மழைக்காலத்தில் அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தரவும், பழைய வீடுகளை புதுப்பிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202205:37:21 IST Report Abuse
அப்புசாமி . இன்னும் என்னதான் செய்யணும்கறீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X