தமிழக அரசின் வருமானம் உயர்வு: நிதி அமைச்சர் தியாகராஜன் தகவல்

Updated : செப் 23, 2022 | Added : செப் 23, 2022 | கருத்துகள் (53) | |
Advertisement
சென்னை :''தமிழக அரசின் வருமானம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் எதிர்பார்த்ததை விட, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை மிகவும் குறையும். கடனை குறைத்ததால் ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்துவதை குறைத்துள்ளோம்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:'தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், பணவீக்கம் குறையும்'
தமிழக அரசின் வருமானம் உயர்வு: நிதி அமைச்சர் தியாகராஜன் தகவல்

சென்னை :''தமிழக அரசின் வருமானம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் எதிர்பார்த்ததை விட, வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை மிகவும் குறையும். கடனை குறைத்ததால் ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலுத்துவதை குறைத்துள்ளோம்,'' என, நிதி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:'தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால், பணவீக்கம் குறையும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாங்கள் ஏற்கனவே குறைத்து விட்டோம் என்றோம். மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசு கடிதம் எழுதுகிறது.'இந்த ஆண்டு உங்களின் மொத்த கடன் வாங்கும் சக்தி இவ்வளவு தான்' என, கட்டளை இடுகின்றனர். ஆனால், இதைச் சொல்ல அவர்களுக்கு எந்த சட்டமும் கிடையாது.'தமிழக அரசு, 2022 - 23ம் ஆண்டு, 83 ஆயிரத்து 955 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கக் கூடாது' என, கடிதம் வந்துள்ளது.



latest tamil news


நாம் எவ்வளவு கடன் வாங்க வேண்டும்; எதில் வருமானம் எடுக்க வேண்டும் என, அவர்கள் கூறினால், நமக்கு என்ன உரிமை உள்ளது? அவர்கள் கூறுகிறபடி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது நியாயம் அல்ல.நாம் பொது வினியோகத்துறைக்கு செலவை மிகவும் அதிகரித்துள்ளோம். கடந்த ஆண்டு, 20 ஆயிரம் கோடி ரூபாய், திட்டமிடாத செலவை செய்து உள்ளோம். பொது வினியோகத்துக்காக, இரண்டு ஆண்டுகளாக, தலா, 13 ஆயிரம்கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளோம்.

மகளிர் இலவச பஸ் பயணத்துக்கு, 1,500 கோடி ரூபாய் செலவழித்து உள்ளோம். இதை சமன் செய்வது நிதித் துறை வேலை. மத்திய அரசின் ஜி.எஸ்.டி.,வருமானம், 37 சதவீதம்உயர்ந்துள்ளது; வருமான வரி 23 சதவீதம் வளர்ந்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட, இரண்டு மடங்குக்கு மேல் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம். கொரோனா பாதிப்பு, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றல், பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம் போன்றவை கொடுத்த பின்னும், ஒரே ஆண்டில் நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம்.

தமிழக அரசின் வரி வருமானம், வரி அல்லாத வருமானம் அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தை, வளர்ச்சியை பாதிக்காத வகையில், செலவையும் பற்றாக்குறையையும் கடனையும் வட்டியையும் குறைத்துள்ளோம். ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டி செலவை குறைத்து

உள்ளோம். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
23-செப்-202216:46:05 IST Report Abuse
krish இருக்காதா பின்னே, மக்களிடம் வலிந்து,வரிந்து கட்டிக்கொண்டு, அவர்களின் வயிற்று எரிச்சலை வரித்து (எதிர்கொண்டு) , வசூலித்த நிதி அல்லவா? நாய் விற்ற காசு குறைக்காது என்ற எண்ணம் போலும்.
Rate this:
Cancel
Dhinesh Kumar - london,யுனைடெட் கிங்டம்
23-செப்-202216:25:32 IST Report Abuse
Dhinesh Kumar இங்கு பல பெரு வயிறு எரியும் இனிமேல்
Rate this:
Cancel
மதுரை கோபி - Madurai ,இந்தியா
23-செப்-202215:58:06 IST Report Abuse
மதுரை கோபி அப்ப அந்த பழைய பென்ஷன் திட்டம் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X