தேசிய தரச்சான்று மதிப்பீட்டுக்குழுஅரசு மருத்துவமனையில் ஆய்வு

Added : செப் 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தேசிய தரச்சான்று மதிப்பீட்டுக் குழு, மூன்று நாட்கள் ஆய்வை நேற்று துவக்கியது.பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கடந்த, 2018ம் ஆண்டு தேசிய தரச்சான்று பெற்றது. தரச்சான்று பெற்று மூன்று ஆண்டுகள் கடந்ததால், புதுப்பிப்பிக்க விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், தேசிய தரச்சான்று பெறும் அளவுக்கு தரம் உள்ளதா என்பது குறித்து மாநில
தேசிய தரச்சான்று மதிப்பீட்டுக்குழுஅரசு மருத்துவமனையில் ஆய்வு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தேசிய தரச்சான்று மதிப்பீட்டுக் குழு, மூன்று நாட்கள் ஆய்வை நேற்று துவக்கியது.பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை கடந்த, 2018ம் ஆண்டு தேசிய தரச்சான்று பெற்றது. தரச்சான்று பெற்று மூன்று ஆண்டுகள் கடந்ததால், புதுப்பிப்பிக்க விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், தேசிய தரச்சான்று பெறும் அளவுக்கு தரம் உள்ளதா என்பது குறித்து மாநில அளவிலான மருத்துவ ஆய்வுக் குழு ஆய்வு செய்தது.தர்மபுரி இணைஇயக்குநர் (பொ) ராஜேஷ் கண்ணா, நாமக்கல் தேசிய சுகாதார இயக்கஅலுவலர் டாக்டர் ஜெயந்தி, மாநில தேசிய தரச்சான்று குழு அரூர் செவிலியர் வாசுகி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது, மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் கோவை மாவட்ட இணை இயக்குனர் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்றனர்.கோவை மாவட்ட இணை இயக்குநர் டாக்டர் ராஜா பேசுகையில், ''தமிழகத்தில் தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனைகளில், ஆய்வு நடைபெற்று வருகின்றன. அதில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்று பெற தரம் உள்ளதா என குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.மூன்று நாட்களில் மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, குழந்தைகள் வார்டு என மொத்தம், 20 பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.ஒவ்வொரு பிரிவிலும், 70 மதிப்பெண்கள் பெற வேண்டும். அரசு மருத்துவமனை மொத்தம், 70 மதிப்பெண் பெற வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் தேசிய தரச்சான்றுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X