மரக்கன்று நடவு; நீர்நிலை பாதுகாப்புவேலை உறுதி திட்டத்தில் இலக்கு

Added : செப் 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி,:பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பல்வேறு திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கிராமங்களில் பொது மற்றும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, இத்திட்டத்தில், பூங்கா இடங்களில் மரக்கன்று நடவு செய்ய பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 1,600 எண்ணிக்கையிலான

பொள்ளாச்சி,:பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், பல்வேறு திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கிராமங்களில் பொது மற்றும் விவசாய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, இத்திட்டத்தில், பூங்கா இடங்களில் மரக்கன்று நடவு செய்ய பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 1,600 எண்ணிக்கையிலான கன்றுகள் நடவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில், 1,200; ஆனைமலையில், 800; கிணத்துக்கடவில், 2,200 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடவு திட்டத்தில், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு ஒன்றியங்களில் தலா, 7,000; ஆனைமலையில், 5,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.பனை விதைகள், நான்கு ஒன்றியங்களிலும் தலா, 2,500 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. பண்ணை குட்டை அமைப்பில், பொள்ளாச்சி வடக்கில், 39; தெற்கில், 26; ஆனைமலையில், 19; கிணத்துக்கடவில், 34 குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.கசிவுநீர் குட்டை அமைக்கும் திட்டத்தில், பொள்ளாச்சி வடக்கில், 200; தெற்கில், 150; ஆனைமலையில், 100; கிணத்துக்கடவில், 150 குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.வற்றிப்போன தனியார், விவசாய மற்றும் பொதுகிணறுகள், போர்வெல்களை புத்துயிர் ஊட்டும் வகையில், மழைநீர் செலுத்தும் திட்டத்தில், பொள்ளாச்சி வடக்கில், 39; தெற்கில், 26; ஆனைமலையில், 19; கிணத்துக்கடவில், 34 எண்ணிக்கையிலான நீர்நிலைகள் மேம்படுத்தப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தங்கள் பகுதியில் இத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள பொதுமக்கள், விவசாயிகள் ஊராட்சி நிர்வாகங்களை அணுகி விண்ணப்பித்து பயனடையலாம், என, ஒன்றிய நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X