மருத்துவமனையில் குடிநீர் இல்லை அவதிக்குள்ளான உள்நோயாளிகள்

Added : செப் 23, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறை அரசு மருத்துவமனையில், 20க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அருகில் உள்ள பிரசவ வார்டிலும் பெண்கள் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மருத்துவமனையில் குடிநீர் வருவதில்லை. இதனால், உள்நோயாளிகள் கழிப்பறையைக்கூட பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், வால்பாறை அரசு

வால்பாறை:வால்பாறை அரசு மருத்துவமனையில், 20க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். அருகில் உள்ள பிரசவ வார்டிலும் பெண்கள் சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் மருத்துவமனையில் குடிநீர் வருவதில்லை. இதனால், உள்நோயாளிகள் கழிப்பறையைக்கூட பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர். நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள், ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.நோயாளிகள் கூறுகையில், 'வால்பாறை அரசு மருத்துவமனையில் அடிக்கடி இது போன்ற பிரச்னை ஏற்படுகிறது. குடிநீர் கூட கிடைக்காத நிலையில், விலை கொடுத்து பாட்டில் குடிநீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக, பிரசவ வார்ட்டில் உள்ள பெண்கள், குடிநீர் கிடைக்காததால் பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 24 மணி நேரமும் குடிநீர் வினியோகிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'அரசு மருத்துவமனைக்கு வழக்கம் போன்று குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை, அங்கு கட்டட பணிக்காக பயன்படுத்துவதால் தான், நோயாளிகளுக்கு கிடைப்பதில்லை. தடையில்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X