பாகூர்-சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளி , மாணவர்களுக்கு மழை கோட் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மூத்த ஆசிரியர் கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு மழை கோட் வழங்கி, பேசினார். நிகழ்ச்சியை முனைவர் ரெக்ஸ் தொகுத்து வழங்கினார். நுண்கலை ஆசிரியர் உமாபதி நன்றி கூறினார்.