புதுச்சேரி-புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பாக சாரதா நவராத்திரியை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு சத சண்டீ மஹா ேஹாமம் வரும் 26ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது.
இதுகுறித்து கீதாராம் சாஸ்திரிகள் கூறியதாவது:புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில் வரும் 26ம் தேதி இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் மூன்றாம் ஆண்டு சண்டீ ேஹாமம் துவங்குகிறது.அன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை வேதிகார்ச்சனையும், மாலை 5 மணிக்கு லலிதா சகஸ்ர நாம பாராயணமும், 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை வேதிகார்ச்னை தினசரி நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை சப்த சதிபாராயணம், சப்த சதி ேஹாமம் , மஹா பூர்ணாஹீதி தீபாராதனை நடக்கிறது. மாலை மூலமந்திர ேஹாமம், பூர்ணாஹீதி சதுர்வேத உபசாரத்தை தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடக்கிறது.வரும் 5 ம் தேதி காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை சப்தசதி பாராயணம், ேஹாமம்,வசோர்தாரை, விசேஷ திரவியாஹூதி, மகா பூர்ணாஹூதி, அபிேஷகம் தீபாராதனை நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் யாக திரவியங்கள், நெய், பூரணாஹீதி சாமான்கள் மற்றும் அன்னதானத்திற்கு நன்கொடை கொடுக்கலாம்.ரூ.2,000 செலுத்தினால் (குடும்பத்தில் 7 நபர்களுக்கு மிகாமல்) மகா சண்டிேஹாமத்தில் சங்கல்பம் செய்து கொண்டு பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை புதுச்சேரி தர்ம சம்ரக்ஷண சமிதி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.