இது உங்கள் இடம்: ஹிந்துக்களை விமர்சிப்போர் கொட்டம் அடங்கும்!

Added : செப் 23, 2022 | கருத்துகள் (124) | |
Advertisement
உலக. நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:க.கணபதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, இப்பகுதியில், திருச்சியைச் சேர்ந்த எஸ்.செல்வசுந்தரி என்ற வாசகி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை வாசிக்கும் போதே, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர்
A Rasa, Seeman, Hindu, DMK, திமுக, ஆ ராஜா, ஹிந்து, சீமான்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


உலக. நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:


க.கணபதி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜாவின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து, இப்பகுதியில், திருச்சியைச் சேர்ந்த எஸ்.செல்வசுந்தரி என்ற வாசகி கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை வாசிக்கும் போதே, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் சொல்வது போன்ற ஒரு நிலைமை உருவாகி விடாதா என்றும் எண்ணத் தோன்றியது. ஆனால், நிதர்சனம் அவ்வாறு இல்லை.

ஹிந்துக்கள், ஹிந்து மத கடவுள்கள், கோவில்கள், வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்கு சம்பிரதாயங்களை, திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.,வினரும் எள்ளி நகைத்து, ஏகடியம் பேசி, கிண்டலும், கேலியும் செய்வது இன்று நேற்று துவங்கியதல்ல. 60 ஆண்டுகளாக, இவ்விரு கட்சிகளும் அதைத் தான் செய்து வருகின்றன; தொடர்ந்து செய்யவும் உள்ளன. இவர்களின் இந்த துணிச்சல் செயல் தொடர்வதற்கு காரணம், ஹிந்துக்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததே.


latest tamil newsஹிந்துக்கள் மத்தியில் மட்டும், முன்னரே ஒற்றுமை உருவாகி இருந்தால், தி.மு.க., 1967ல், தமிழகத்தில் ஆட்சியை பிடித்திருக்கவே முடியாது. கோவில்களின் வாசல்களில், கடவுள் மறுப்பு வாசகங்களுடன் கூடிய, ஈ.வெ.ரா., சிலைகளும் நிறுவப்பட்டிருக்காது. மேலும், ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால், பிள்ளையார் சிலையை உடைத்தோரை ஆதரித்து இருப்பரா? ராமனுக்கு செருப்பு மாலை அணிவித்து ஆனந்தித்தோருக்கு ஓட்டளித்து இருப்பரா? அத்துடன், தி.க., மற்றும் தி.மு.க.,வினர், ஹிந்து மதத்தை கேலியும், கிண்டலும் செய்வதை, ஹிந்துக்களிலேயே ஒரு கூட்டம் சிரித்து, ரசித்துக் கொண்டு தான் இருக்கிறது.

அவ்வளவு ஏன்... ஒரு வாரத்துக்கு முன், திருச்செந்துார் கோவிலில் முருகனுக்கு துலாபார நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு வந்த, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆ.ராஜாவின், 'விபச்சாரிகளின் மகன்கள்' பேச்சை ஆதரித்து அறிக்கை விடுத்துள்ளார்.


latest tamil news


ஹிந்துக்கள் அனைவரும் விபச்சாரிகளின் மகன்கள் என்றால், சீமானும் அவர்களில் ஒருவர் தானே? சீமான், ஹிந்து அல்ல. கிறிஸ்துவர் என்றால், அந்த கிறிஸ்தவர் திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவானேன்? ஏதாவது சர்ச்சுக்கு சென்று, அங்கல்லவா வேண்டுதலை நிறைவேற்றி இருக்க வேண்டும்?

ஹிந்துக்களில், 90 சதவீதம் பேர், இப்படித் தான் சீமானை போல அறிவு கெட்டு, புத்தி கெட்டு, மூளை கெட்டு, தன்மானம் கெட்டு, சூடு சொரணையற்று, நடமாடும் பிணங்களாய் உலாவிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எல்லாம் மாறினால் மட்டுமே, ஹிந்துக்களை, ஹிந்து மதத்தை விமர்சிப்போரின் கொட்டமெல்லாம் அடங்கும். அந்த நாள் வெகு துாரத்தில் இல்லை என்று, நம்புவோமாக!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (124)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s. mohan -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202202:02:18 IST Report Abuse
s. mohan இவனுங்க ரெண்டு பெரும் போக்கத்த அரசியல்வாதிகள். இவனுங்க பெயர் தினமும் ஊடகங்களில் வரவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். நான் ஒன்று மட்டும் கேட்கிறேன் இவர்களை போன்ற மிருகத்தை விட கேவலமானவர்களுக்கு 80 சதவிகிதம் ஹிந்துக்கள் உள்ள இந்த தேசத்தில் ஹிந்துக்களுக்கே ஒற்றுமை இல்லையென்றால் கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் பேசத்தான் செய்யும்.
Rate this:
Cancel
23-செப்-202220:30:32 IST Report Abuse
SUBBU,MADURAI //அம்பேத்கர் ஏன் மனுசும்ருதியை எதிர்த்தார்//அட அறிவுஜீவி தமிழக பற்றாளா முதலில் அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பிராமணருடைய பெயர் என்பது உனக்கு தெரியுமா.அந்த அப்பேத்கர் என்ற பெயருடைய பிராமணர்தான் பீமாராவ் ராம்ஜி ஏழை சிறுவனாயிருந்த போது அவரை படிக்க வைத்தவர்.அதனால் பீமாராவ் ராம்ஜி அந்த பிராமணருக்கு நன்றி செலுத்தும் விதமாக அவருடைய அம்பேத்கர் என்ற பெயரை தனக்கு வைத்து கொண்டார்.இதெல்லாம் உன்னைப் போன்ற அறிவாலய உபிகளுக்கு எங்கே தெரியப் போகிறது.
Rate this:
Cancel
RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
23-செப்-202220:11:06 IST Report Abuse
RAMAKRISHAN NATESAN     ,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X