மோடியின் பேச்சை கேளுங்க: ரஷ்யாவுக்கு பிரிட்டன் அறிவுரை

Added : செப் 23, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
நியூயார்க்: 'சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை உள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்' என பிரிட்டன் கூறியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. இந்நிலையில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது
Russiawar, James Cleverly, PM Modi, பிரதமர் மோடி, ஜேம்ஸ் கிளெவர்லி , Modi,  Narendra Modi, நரேந்திர மோடி, மோடி, பிரிட்டன்,Britain,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நியூயார்க்: 'சர்வதேச அரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு நல்ல மரியாதை உள்ளது. அவருடைய பேச்சைக் கேட்டு உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும்' என பிரிட்டன் கூறியுள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. இந்நிலையில் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடந்த எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது, 'இந்த யுகம் போருக்கானது அல்ல' என, பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஐ.நா., பொது சபை கூட்டம் நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பேசிய ஐரோப்பிய நாடான பிரான்சின் அதிபர் இமானுவேல் மேக்ரான் உட்பட பல தலைவர்கள் பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்று உள்ளனர்.


latest tamil news


இது குறித்து பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளெவர்லி கூறியுள்ளதாவது: சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு பெரும் மரியாதை உள்ளது. பிரதமர் மோடி மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் பெரும் மரியாதை, நட்பு உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அதனால், மோடியின் பேச்சைக் கேட்டு, உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஐ.நா., பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்று உள்ள நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று முன்தினம் ஜேம்ஸ் கிளெவர்லி சந்தித்து பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ajay -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202203:19:30 IST Report Abuse
ajay US, European countries are playing and Using MODI Name on this matters to make mis understanding with RUSSIA.
Rate this:
Cancel
Senthil Kumar - chennai,இந்தியா
23-செப்-202217:43:30 IST Report Abuse
Senthil Kumar எல்லோரும் ஒரு முறை கைதட்டஉம பிறகு எல்லோரும் ஒரு முறை விலாக்கை அனைத்து மீண்டும் விளக்கு ஏற்றினால் இந்த போர் முடிந்து விடும் , மோடி சொல்வதை கேளுங்க பப்பா .
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
23-செப்-202216:06:52 IST Report Abuse
Asagh busagh ,,,,,,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X