18 - 65 வயது வரையிலானோர் ரஷ்யாவை விட்டு வெளியேற தடை?

Added : செப் 23, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவில், 18 - 65 வயது வரை உள்ளவர்கள் விமானம் மற்றும் ரயில்களில் நாட்டைவிட்டு வெளியேற பயணசீட்டு அளிக்க கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்., 25ல் போர் தொடுத்தது. தற்போது, போர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், அது நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யப் படைகளுக்கு
Russia Ukraine War, Putin, ரஷ்யா,  உக்ரைன் போர் , விளாடிமிர் புடின், Russia, Ukraine War, Vladimir Putin,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாஸ்கோ: ரஷ்யாவில், 18 - 65 வயது வரை உள்ளவர்கள் விமானம் மற்றும் ரயில்களில் நாட்டைவிட்டு வெளியேற பயணசீட்டு அளிக்க கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த பிப்., 25ல் போர் தொடுத்தது. தற்போது, போர் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையிலும், அது நீடித்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யப் படைகளுக்கு எதிராக, உக்ரைன் ராணுவம் கடும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், போரை தீவிரப்படுத்தும் வகையில், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்களை, தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. டோனெட்ஸ்க், லுஹான்க்ஸ், கெர்சான் மற்றும் ஜபோரிஸ்சியா ஆகிய நான்கு பிராந்தியங்களை, தங்களுடன் இணைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில், 'டிவி' வாயிலாக ரஷ்ய மக்களிடையே அதிபர் விளாடிமிர் புடின் நேற்று முன்தினம் ஆற்றிய உரையில், 'ரஷ்ய ராணுவத்தில் மூன்று லட்சம் வீரர்கள் இருப்பில் வைக்கப்படுவர்' என, தெரிவித்தார்.


latest tamil news


இந்த அறிவிப்பை அடுத்து, ரஷ்யாவின் அண்டை நாடுகளான அர்மேனியா, ஜார்ஜியா, அஸர்பைஜான், கஜகஸ் தான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அடுத்த சில நாட்களுக்கு முழுவதுமாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடும் சட்டத்தை ரஷ்ய அரசு அமல்படுத்தகூடும் என்பதால் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவத்தில் பணியாற்ற தகுதி யுடைய 18 - 65 வயது வரையிலான ரஷ்யர்கள் நாட்டைவிட்டு வெளியேற விமானம் மற்றும் ரயில்களில் பயணசீட்டு வழங்க கூடாது என ரஷ்ய அரசு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. ராணுவத்தின் முறையான அனுமதி உள்ளவர்கள் மட்டுமே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aiay -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202203:14:38 IST Report Abuse
Aiay UKRAINE Should not continue stand with his statement until wars started. if Ukraine withdraw decision to joining with NATO. Sure Russians wont start this war. Here We should see everything from one side. we should see the things from both sides.
Rate this:
Cancel
Ajay -  ( Posted via: Dinamalar Android App )
24-செப்-202203:10:39 IST Report Abuse
Ajay See, am working with Russians for past 5years. To say very frank Russians are nice and good peoples. Putin will not make this kinds mistake. May American countries based media spread fake rumor news against Putin.
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
23-செப்-202214:12:11 IST Report Abuse
Asagh busagh தங்களை அழைக்காத வரை புடினுக்கு சொம்படித்த ரஷ்ய போர்விரும்பிகளே இப்போ அழைப்பு வந்த பின் ஓட்டம் எடுக்கிறார்கள். இதெல்லாம் ஒரு போரா? இந்த பொழப்புக்கு புடினும் இராணுவ ஜெனரல்களும் தொங்கிறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X