கைதான பா.ஜ., தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு

Added : செப் 23, 2022 | கருத்துகள் (74) | |
Advertisement
கோவை : வையில் கைதான பா.ஜ., மாவட்ட தலைவர் மீதான முதல் தகவல் அறிக்கையில், கூடுதலாக எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.நீலகிரி தொகுதி தி.மு.க., எம்.பி., ராஜா, இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை கண்டித்து, பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். கோவை பீளமேட்டில், ஹிந்து முன்னணி சார்பில் நடந்த
BJP, Balaji, A Raja, DMK

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை : வையில் கைதான பா.ஜ., மாவட்ட தலைவர் மீதான முதல் தகவல் அறிக்கையில், கூடுதலாக எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

நீலகிரி தொகுதி தி.மு.க., எம்.பி., ராஜா, இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததை கண்டித்து, பா.ஜ., ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தினர். கோவை பீளமேட்டில், ஹிந்து முன்னணி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பேசினார்.

இது தொடர்பாக, கலவரத்தை துாண்டுதல், அமைதியை சீர்குலைத்தல், இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்துதல் ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர்.கோவை ஜே.எம்:2, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்


latest tamil news



.எப்.ஐ.ஆரில், ஏற்கனவே போடப்பட்ட மூன்று சட்டப்பிரிவுடன், கூடுதலாக எஸ்.சி., - எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டு, அதன் நகலை போலீசார் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து, வழக்கு ஆவணங்கள் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன. பாலாஜி உத்தம ராமசாமியை ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் பா.ஜ., வக்கீல்கள் இன்று, மனு தாக்கல் செய்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Democracy - Madurai,இந்தியா
23-செப்-202220:59:31 IST Report Abuse
Democracy அந்த திருச்சி சூரியாவையும் இதே சட்டத்தில் தூக்குங்க. கைது பண்ணி வழுக்கி விழ வைங்க போலீஸ்கார். ஒன் இந்தியா வலைதள பத்திரிக்கையில் நேர்காணலில் " ஏ ராசா எல்லாம் பன்னி மேக்க வேண்டிய ஆளு, மேடையிலே பேசுறாப்புலே" என்று பலமுறை எகத்தாளமாக பேசினார்.
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
24-செப்-202212:18:22 IST Report Abuse
Paramanவன்கொடுமை சட்டத்தில் அவரை தண்டிக்க வேண்டும்...
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
27-செப்-202214:00:44 IST Report Abuse
Paramanஇந்த பன்றிகளை விட கேவலமானவர் தினமலரின் தீயமூக்கா சார்பு கொண்ட சொறியாளன்...என் கருத்தை கேவலமா வெட்டி அதன் குறிக்கோளையே சிதைத்த தினமலர் சொறியாளன் நல்ல குடும்பத்தில் பிறந்து இருக்க முடியாது ...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-செப்-202220:15:14 IST Report Abuse
Ramesh Sargam காக்கி உடையில் உள்ள காவலர்கள் தலை குனிந்து செல்வதை பார்த்தால், ஏதோ ஒரு நிபந்தனையில், ஏதோ ஒரு சிலர் மிரட்டலில் இப்படி பாஜக தலைவர்களை கைது செய்கிறார்கள் என்பது தெளிவாக புலப்படுகிறது. அவர்கள் என்ன செய்ய முடியும், பாவம். அப்படி கைது செய்யாவிட்டால், ஒன்று suspend செய்யப்படுவார்கள் அல்லது promotion போன்ற பலன் கிடைக்காமல் போகும். அவர்களும் இந்த திமுக ஆட்சிக்கு பயந்துதான் பணிபுரிகிறார்கள்.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
23-செப்-202220:15:02 IST Report Abuse
Soumya கேடுகெட்ட இந்துமத ஜென்ம விரோதி புரூடா விடியல் எப்போதுமே இந்து மதத்துக்கு எதிராக தானே செயல்படுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X