இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

Added : செப் 23, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சரிவைக் கண்டது.ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 காசுகள் குறைந்து, 80.86 ரூபாயாக சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து, ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவைக் கண்டது.நேற்று, சந்தை துவக்கத்தில் 80.27 ரூபாயாக இருந்த மதிப்பு, நாளின் இடையே 80.95 ரூபாய் எனும்
Indian Rupee, US Fed, US dollar, அமெரிக்க டாலர், இந்திய ரூபாய், அமெரிக்க மத்திய வங்கி,

மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, நேற்று, வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சரிவைக் கண்டது.

ரூபாயின் மதிப்பு கிட்டத்தட்ட 90 காசுகள் குறைந்து, 80.86 ரூபாயாக சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு அறிவிப்பை அடுத்து, ரூபாயின் மதிப்பு கடுமையான சரிவைக் கண்டது.நேற்று, சந்தை துவக்கத்தில் 80.27 ரூபாயாக இருந்த மதிப்பு, நாளின் இடையே 80.95 ரூபாய் எனும் அளவுக்கு சரிவைக் கண்டு, இறுதியில் 80.86 ரூபாயில் நிலைபெற்றது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு, அன்னிய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது, உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் பெரிய ஏற்றமில்லாதது ஆகியவை காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டிருப்பதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க மத்திய வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியை அடுத்து, பேங்க் ஆப் இங்கிலாந்தும் வட்டியை உயர்த்தி உள்ளது. பேங்க் ஆப் ஜப்பானும் வட்டியை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopinathan S - chennai,இந்தியா
23-செப்-202211:55:13 IST Report Abuse
Gopinathan S அமெரிக்காவில் டாலரில் சம்பாதித்து இந்தியாவுக்கு ரூபாயில் பணம் அனுப்பும் நபர்களுக்கு இதனால் மேலும் லாபமா? தெரிந்தவர்கள் விளக்க முடியுமா?
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
23-செப்-202211:24:56 IST Report Abuse
sankar நிம்மி அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
23-செப்-202211:17:39 IST Report Abuse
ராம.ராசு வரலாறு காணாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதைச் செய்தியாக்கி அதற்கு ஆட்சியாளர்கள், அரசு காரணம் அல்ல என்பது போல "அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அதிகரிப்பு, அன்னிய சந்தைகளில் அமெரிக்க டாலர் வலுவடைந்தது, உள்நாட்டு பங்கு வர்த்தகம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் பெரிய ஏற்றமில்லாதது ஆகியவை காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைக் கண்டிருப்பதாக" அதையும் நிபுணர்கள் சொல்வதாக சப்பைக்கட்டு கட்டி, செய்தியாக்கியுள்ளது திறமைதான். 2013 ஆண்டு இப்போதைய நமது பிரதமர் கைகளைத் தட்டிப் பேசியது "பங்களாதேஷ் ரூபாய் மதிப்புக்கு குறையவில்லை பாகிஸ்தான் ரூபாயின் மதிப்புக்கு குறையவில்லை. ஸ்ரீ லங்கா ரூபாய் மதிப்புக்கு குறையவில்லை. என்ன காரணத்தினால் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது" என்று. பேச்சு அருமையாக, மிகச் சிறப்பாக இருந்தது. அப்போது, அதாவது 2013 இல் 1 அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.62.10. அதே 5 வருடங்கள் கழித்து 2018 இல் 70.55. தற்போது அது ரூ.80.86 இல் வந்து நிற்கிறது. கிட்டத்தட்ட 9 வருடங்களில் மட்டும் 18.76 ரூபாய், 30.21% சரிவை கண்டுள்ளது. 1947 இல் 1 அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ரூ.4.16. 1947 முதல் 2013 (75 வருடங்கள்) வரையிலான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியின் அளவு ரூ.57.94, 13.93% (மட்டும்). ஆனால் 9 வருடங்களில் மட்டும் 30.21% சரிவை அடைந்துள்ளது. ஆட்சியாளர்களைக் குறை சொல்ல அல்ல இந்தப்பதிவு. சில புள்ளிவிவரங்கள் கிடைத்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X