புதுப்பொலிவு பெறும் 'கொடை' செட்டியார் பூங்கா

Added : செப் 23, 2022 | |
Advertisement
கொடைக்கானல்- கொடைக்கானலில் உள்ள செட்டியார் பூங்கா புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப் பூங்கா நான்கரை ஏக்கரில் உள்ளது. இங்கு மலர் செடிகள், நீரூற்றுகள் உள்ளன. குறிஞ்சியாண்டவர் கோயில் அருகில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பூங்காவை மேலும் அழகுற செய்யும் நடவடிக்கையில் தோட்டக்கலைத்
கொடைக்கானல், செட்டியார் பூங்கா,  சுற்றுலா, Kodaikanal, Chettiar Park, Tourism,



கொடைக்கானல்- கொடைக்கானலில் உள்ள செட்டியார் பூங்கா புது பொலிவுடன் காட்சியளிக்கிறது.

கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப் பூங்கா நான்கரை ஏக்கரில் உள்ளது. இங்கு மலர் செடிகள், நீரூற்றுகள் உள்ளன. குறிஞ்சியாண்டவர் கோயில் அருகில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பூங்காவை மேலும் அழகுற செய்யும் நடவடிக்கையில் தோட்டக்கலைத் துறை ஈடுபட்டு வருகிறது.

அருவி, நீரூற்று, ஹாட் ராக் அருவி, மயில், மலர்களால் ஆன உருவங்கள், வண்ணத்துப் பூச்சி அமைத்து வருகின்றனர். புதிய வகை மலர்கள் நடவு, பூங்காவில் உள்ள புல்வெளிகளை நவீனப்படுத்துதல் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மலர்களான ஓவியங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளும் நடக்கிறது.இப்பணிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. 'ஆண்டு முழுவதும் இங்கு பூக்கள் பூப்பதால் செட்டியார் பூங்காவிற்கு அதிகளவு பயணிகள் வருகின்றனர். எதிர்வரும் சீசனில் இங்கு லட்சக்கணக்கான மலர்களை பூக்க செய்து பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இப்பணிகளை செய்து வருவதாக,' தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X