ரயில்களில் பட்டாசுக்கு தடை: மீறினால் சிறை தண்டனை

Added : செப் 23, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: 'ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இருப்பினும், தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணியர், பட்டாசுகளை எடுத்துச் செல்வர். இதை
Train, crackers, Diwali, Railways, Indian Railway, IRCTC, ரயில், பட்டாசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: 'ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என, ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

ரயிலில் பட்டாசு, டீசல், பெட்ரோல் போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. இருப்பினும், தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணியர், பட்டாசுகளை எடுத்துச் செல்வர். இதை தடுக்கும் வகையில், ரயில் நிலையங்களில் ஆண்டுதோறும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும்.


latest tamil news


இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி மருந்து, எரிபொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருந்துவருகிறது. விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.முதன்முறையாக பிடிப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும்.

தொடர்ந்து, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தீபாவளி நெருங்கவுள்ள நிலையில், அடுத்த வாரம் ரயில்களில் பாதுகாப்பான பயணம் குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.

பட்டாசு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில், 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன், பயணியரின் உடமைகளை சோதனை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23-செப்-202211:33:59 IST Report Abuse
Ramesh Sargam ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கலாம். அதுவும் கழிவறையில் மறைந்துகொண்டு. ஆனால் பட்டாசு எடுத்து செல்ல தடை. இது என்னய்யா நியாயம்...?
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
23-செப்-202211:48:30 IST Report Abuse
தியாகு சரி சரி விடுங்க, பட்டாசு எடுத்துசெல்வபவன் பாவம், ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் டுமிழகத்தை ஆட்டையை போடமாட்டான். அதனால் அவனை எடுத்து செல்ல விடலாம்....
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-செப்-202209:44:35 IST Report Abuse
Loganathan Kuttuva மெட்டல் டிடெக்டர் பட்டாசுகளை கண்டுபிடிக்காது .
Rate this:
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
23-செப்-202210:15:49 IST Report Abuse
தியாகு ஹி...ஹி...ஹி...இதென்ன பிரமாதம், கட்டுமர திருட்டு திமுகவினர் ஆட்டையை போடுவதை உலகின் எந்த ஒரு தொழில்நுட்பத்தாலும் கண்டுபிடிக்கமுடியாது. ஹி...ஹி...ஹி......
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
23-செப்-202209:35:45 IST Report Abuse
Narasimhan The fact that communists are keeping both shut tells it all
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X