தி.மு.க.,வின் கிளை அமைப்பா இந்திய கம்யூனிஸ்ட்?

Added : செப் 23, 2022 | கருத்துகள் (54) | |
Advertisement
சென்னை : நுாற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் தி.மு.க.,வின் கிளை அமைப்பு போல செயல்படுவதாக, அக்கட்சி தொண்டர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.கடந்த, 1925-ல் துவங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் மூன்று ஆண்டுகளில் நுாற்றாண்டை கொண்டாட இருக்கிறது. 1951 முதல் தமிழகத்தில் முக்கிய அரசியல் சக்தியாக இருந்த, இந்திய கம்யூனிஸ்ட், இப்போது வலுவிழந்துள்ளது.
DMK, CPI,  Mutharasan,   இந்திய கம்யூனிஸ்ட் , திமுக, முத்தரசன், மின் கட்டணம், சென்னை, Communist Party,electricity bill, Chennai,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : நுாற்றாண்டை நெருங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழகத்தில் தி.மு.க.,வின் கிளை அமைப்பு போல செயல்படுவதாக, அக்கட்சி தொண்டர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்த, 1925-ல் துவங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இன்னும் மூன்று ஆண்டுகளில் நுாற்றாண்டை கொண்டாட இருக்கிறது. 1951 முதல் தமிழகத்தில் முக்கிய அரசியல் சக்தியாக இருந்த, இந்திய கம்யூனிஸ்ட், இப்போது வலுவிழந்துள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி கூட்டணி அமைத்து, சில எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 2019 லோக்சபா தேர்தல் முதல், தி.மு.க., கூட்டணியில் உள்ளது.

லோக்சபாவில் அக்கட்சிக்கு உள்ள இரண்டு எம்.பி.,க்களும், தமிழகத்தை சேர்ந்தவர்கள்; தி.மு.க., தயவால் வென்றவர்கள்.கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், ஆறு இடங்களில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கீழ்வேளூர், தளி ஆகிய இரு இடங்களில் மட்டுமே வென்றது. 2021-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அந்த கட்சியின் கிளை அமைப்பாகவே, இந்திய கம்யூனிஸ்ட் மாறி விட்டதாக, அக்கட்சி தொண்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


குற்றச்சாட்டு


தி.மு.க., கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன், மின் கட்டண உயர்வு, பத்திரிகையாளர் கைது போன்ற விவகாரங்களில், தி.மு.க., அரசை சற்று காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கு, 'வெறும் வாயில் மென்று கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு, மார்க்சிஸ்ட் கட்சி அவல் கொடுப்பதா?' என, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழ் விமர்சித்தது.

ஆனால், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, நெல் கொள்முதல் பிரச்னை உள்ளிட்ட அனைத்திலும், தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட கூட, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் முன்வருவதில்லை என, அக்கட்சி தொண்டர்களே கூறுகின்றனர்.


latest tamil news
தீவிர விசுவாசியாக...


மின் கட்டண உயர்வு போன்ற பிரச்னைகளில் கூட, 'சரியல்ல, திரும்ப பெற வேண்டும்' என்பது போன்ற வலிக்காத மாதிரியான வார்த்தைகளை தேர்வு செய்து, அறிக்கை விடுவதாகவும், முத்தரசன் மீது குற்றம் சாட்டுகின்றனர்.அகில இந்திய மாநாட்டை ஒட்டி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'அரசியல் சித்தாந்த பணிகளை தீவிரப்படுத்தி, போர்க்குணம் மிக்க இயக்கங்களை நடத்த வேண்டும்' என, முத்தரசன் கூறியுள்ளார். ஆனால், செயல்பாடுகள் அதற்கு நேர் எதிராக உள்ளது என்கின்றனர்.

தா.பாண்டியன் பொறுப்பில் இருந்தவரை, ஜெயலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். தா.பாண்டியனால் மாநில செயலராக்கப்பட்ட முத்தரசன், அவரது வழியில் இன்று, தி.மு.க., தீவிர விசுவாசியாக செயல்படுகிறார். இதனால், தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும், தங்களது முயற்சிக்கு எந்தப் பலனும் இல்லாமல் போவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அனுப்பிய முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், 24-வது அகில இந்திய மாநாடு, அக்டோபர், 14 முதல், 18 வரை, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடக்கவுள்ளது. இதில், முன் வைக்கப்பட உள்ள தீர்மானம், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. தீர்மானத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 'ஆர்.எஸ்.எஸ்.,சின் அரசியல் கரமாக விளங்கும், பா.ஜ., ஆட்சியை அகற்ற வேண்டும்' என, அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yogeshananda - Erode,இந்தியா
23-செப்-202221:02:52 IST Report Abuse
Yogeshananda உண்டியல் குலுக்கிகளுக்கு எலும்பு துண்டு கிடைத்தால் போதும் என்ன வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஆதரிப்பானுக...
Rate this:
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
23-செப்-202220:15:37 IST Report Abuse
Siva காசு வாங்கி திமுகவில் ஐக்கியமாகி மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஏதோ இளிச்சவாயன் தமிழனை தோழர்கள் என்று ஏமாற்றி பொய் சொல்லி வயிறு வளர்க்கும் கூட்டம்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-செப்-202219:23:01 IST Report Abuse
Rajagopal கம்யுனிசத்தால் உலகத்தை அழிக்கத்தான் முடியும். வேறெதுவும் செய்ய முடியாதென்பதை உலகம் அனுபவத்தால் உணர்ந்திருக்கிறது. கடையை மூடி விட்டு கடலில் போய் முழுகுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X