திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும் 26ல் நவராத்திரி விழா துவங்க உள்ளது. இதை முன்னிட்டு, பராசக்தி அம்மன், ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.தொடர்ந்து, 27ல் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 28ல் கெஜலட்சுமி அலங்காரம், 29ல் மனோன்மணி அலங்காரம், 30ல் ரிஷப வாகன அலங்காரம் நடைபெறும்.அக்., 1ல் ஆண்டாள் அலங்காரம், அக்., 2ல் சரஸ்வதி அலங்காரம், அக்., 3ல் லிங்க பூஜை அலங்காரம், 4ல் காலை, பஞ்ச மூர்த்திகள் அபிஷேகம் மற்றும் விஜயதசமி விழா கொண்டாட்டம் நடைபெறும்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்கிறது.