சென்னை : அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, பன்னீர்செல்வம், பழனிசாமி கோஷ்டியினர், 67 பேர், சி.பி.சி.ஐ.டி., போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட்டனர்.
கடந்த ஜூலை 11ல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.கலவரம் தொடர்பாக, பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி கோஷ்டியினர், 69 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.நீதிமன்ற உத்தரவின்படி, பழனிசாமியின் ஆதரவாளர்கள், 40; பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 27 என, மொத்தம், 67 பேர், சென்னை எழும்பூரில், சி.பி.சி.ஐ.டி., தலைமை அலுவலகத்தில் நேற்று காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட்டனர்.