மருந்துகள் பற்றாக்குறை எதிரொலி : ஜிப்மர் மருத்துவமனையில் கவர்னர் திடீர் ஆய்வு

Added : செப் 23, 2022 | |
Advertisement
ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் சமீபகாலமாக மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவி வந்தது. நோயாளிகளை வெளியில் மருந்து வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜிப்மர் நிர்வாகம்,
Governor,ஆளுநர்,கவர்னர்



ஜிப்மர் மருத்துவமனையில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் சமீபகாலமாக மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவி வந்தது. நோயாளிகளை வெளியில் மருந்து வாங்கிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் ஜிப்மர் நிர்வாகம், கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, அனைத்து துறை தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து கவர்னர் தமிழிசை, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், தலைமை செயலர் ராஜிவ் வர்மா, சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு ஆகியோர் நேற்று ஜிப்மரில் ஆய்வு செய்தனர்.
இரண்டு மணி நேர ஆய்விற்கு பின் கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது.
ஜிப்மர் நிர்வாகம், பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை செய்து வருகிறது. கடந்தாண்டு மட்டும் 2.47 லட்சம் பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 1.70 லட்சம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர். 60 ஆயிரம் பேர் புதுச்சேரியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 ஆயிரம் பேர் பிற மாநிலத்தவர்கள்.மருந்து தட்டுப்பாடு புகார் குறித்து ஜிப்மர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினோம், அதில், மருந்து தட்டுபாடு இல்லை.
ஆனால் சில மருந்துகள் இல்லாததால் வெளியே வாங்க பரிந்துரை செய்ததாக தெரிவித்தனர். மேலும், கொரோனா தொற்று காரணமாக சில மருந்துகள் கிடைக்கவில்லை. மேலும், டெண்டர் விடுவதிலும் சிக்கல் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.மேலும், புறநோயாளிகளுக்கு மருந்து இலவசமாக வழங்குவதாகவும், யாரையும் வெளியில் மருந்து வாங்க சொல்வதில்லை என ஜிப்மர் நிர்வாகத்தினர் கூறினர்.
இப்பிரச்னைகளை உடனடியாக சரி செய்து, வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள உள்நோயாளிகளுக்கு முழுவதுமாக இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்து இல்லை என யாரையும் வெளியே வாங்க பரிந்துரைக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.அதேபோன்று, நோயாளிகளின் உறவினர்கள் ெஷட்டில் தங்க ரூ.10 கட்டணம் வசூலிப்பதை நிறுத்திவிட்டு, இலவசமாக தங்க வைக்கவும், தகவல் மையத்தில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களை பணியில் அமர்த்த அறிவுறுத்தி உள்ளோம். இதனை ஜிப்மர் நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இவ்வாறு கவர்னர் கூறினார்.

தவறுதான்: கவர்னர்


ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வு செய்த கவர்னரிடம், செய்தியாளர்கள் பாராசிட்டமல் மாத்திரை கூட இல்லை என்றனர். அதனை கவர்னர் மறுக்கவே, செய்தியாளர்கள் இயக்குநரை அழைத்து கேட்க வலியுறுத்தினர்.அதனைத் தொடர்ந்து ஜிப்மர் அதிகாரியை அழைத்த கவர்னர், பாராசிட்டமல் மாத்திரை இருப்பு உள்ளதா என்றார்.அதற்கு பதில் அளித்த அதிகாரி, பாராசிட்டமல் மாத்திரை இல்லாதது உண்மை தான், ஆனால் தற்போது நிலைமை சரி செய்யப்பட்டுள்ளது எனறார்.உடன் கவர்னர் பாராசிட்டமல் கூட இல்லாதது தவறுதான் என்றார்.





புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X