வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காரைக்குடி: மக்களை தவறாக வழிநடத்தும் தி.மு.க., மோசமான அரசியலை செய்து வருவதாக பா.ஜ., தேசியத்தலைவர் நட்டா கூறியுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வந்துள்ள பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பிற்பகலில் சிவகங்கை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் பூத் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மாலை
நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகம் ஒரு புண்ணிய பூமி. இங்கு வரும்போதெல்லாம் புத்துணர்ச்சி கிடைக்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை நம்பி சிறப்பான ஆட்சி தருகிறார். வளர்ச்சியை கருத்தில் கொண்டு உழைத்து வருகிறார். வளர்ச்சி திட்டங்களை முன்னெடுத்து செயல்படுத்துகிறோம். பா.ஜ., ஆட்சியில் நாடு வரலாறு காணாத அளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
தமிழகத்தில் பாஜ., வளர்ச்சி பெறுவதை கண்கூடாக பார்க்கிறேன். பல்வேறு கட்சி நிர்வாகிகள் பா.ஜ.,வில் இணைய தயாராக உள்ளனர். பல்வேறு தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டுள்ளேன்.மத்தியில் தமிழகத்தின் பங்கேற்பு இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மக்களின் பிரச்னையை திமுக அரசு புரிந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது. திமுக.,வின் மொத்த கலாசாரமே ஊழல் தான். அக்கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. மோசமான அரசியலை வழிநடத்துகிறது. வாரிசு அரசியல், பண விநியோகம், கட்டப்பஞ்சாயத்து அரசியலை திமுக செய்கிறது. தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்றும் என நம்புகிறேன். இவ்வாறு நட்டா கூறினார்.