கொள்முதல் நிலையங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது: விவசாயிகள் குற்றச்சாட்டு

Added : செப் 23, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மயிலாடுதுறை;அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது என குறைதீர்க்க கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து அவர் வேறு பணிக்குச் சென்றதால் டிஆர்ஓ. முருகதாஸ் கூட்டத்தை நடத்தினார்.
கொள்முதல் நிலையங்களில் பணம்  செலுத்த வேண்டிய சூழல் உள்ளது: விவசாயிகள் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை;அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது என குறைதீர்க்க கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் லலிதா தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து அவர் வேறு பணிக்குச் சென்றதால் டிஆர்ஓ. முருகதாஸ் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக அரவைக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


மேலும் அரசு கொள்முதல் நிலையங்களில் டோக்கன் சிஸ்டம் தவறாக இருப்பதாகவும் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதிகப்படியான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் தான் ஊழல்கள் நடைபெறுவதாகவும் கொள்முதல் நிலையத்தில் அனைத்திற்கும் பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், ஒரு மூட்டைக்கு ரூ 45 வீதம் கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியதுடன், விவசாயிகள் பாவப்பட்டு நிற்கின்றனர், அவர்களை வஞ்சிக்கும் சூழலை அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-செப்-202208:01:34 IST Report Abuse
Girija சிரி என்ன சின்னப்புள்ளதனமா இருக்கு ?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-செப்-202206:10:44 IST Report Abuse
Bhaskaran அடப்போங்கப்பா திராவிடமாடலில் அரசாய் மிரட்டும் அதிகாரிகள் இருக்கின்றனர் முதல்வர் கூட ஒன்னும் செய்யமுடியாது
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-செப்-202204:14:37 IST Report Abuse
வெகுளி திராவிட மாடலில் இது வழக்கம்தான்.... இந்த கொடுமைகளை ஒழிக்கத்தானே புதிய விவசாய சீர்திருத்த சட்டங்களை ஜி கொண்டு வந்தார்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X