மாநகராட்சி அனுமதியிருந்தால் தான்புதிய மின் கம்பம்: ஊழியர்கள் குழப்பம்

Added : செப் 23, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பகுதியில் மின் வாரியத்தினர், பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கும்போது மாநகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும் என, மின்வாரிய உதவி பொறியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், புதிய மின் கம்பம் அமைப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு என இரு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பகுதியில் மின் வாரியத்தினர், பழைய மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கும்போது மாநகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும் என, மின்வாரிய உதவி பொறியாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், புதிய மின் கம்பம் அமைப்பதில் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் நிர்வாக வசதிக்காக வடக்கு, தெற்கு என இரு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் நகரத்தில், சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, சங்கரமடம், பிள்ளையார்பாளையம், ஓரிக்கை என, ஐந்து பிரிவு அலுவலகங்கள் உள்ளன.
வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள, ஊரக, நகர்புற, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறையினருக்கு காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின் தட பாதையில் இடையூறாக உள்ள மரக்கிளைகளை மின் ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். அதேபோல, சேதமடைந்த மின் கம்பங்களையும் கண்டறிந்து பழைய கம்பங்களை அகற்றி புதிய கம்பம் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரில், ஜவஹர்லால் நேரு சாலை, கிழக்கு ராஜ வீதி, அறப்பெருஞ்செல்வி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த, 30 மின் கம்பங்களை கண்டறிந்த மின் வாரியத்தினர் பழைய கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்கும் பணியை துவக்கியுள்ளனர்.
அறப்பெருஞ்செல்வி தெருவில் , சேதமடைந்த பழைய மின் கம்பத்திற்கு மாற்றாக புதிய மின் கம்பம் அமைப்பதற்கான பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது காஞ்சிபுரம் மாநகராட்சி உதவி பொறியாளர் உலகநாதன், சிவ காஞ்சி பிரிவு மின் வாரிய உதவி பொறியாளர் சோழராஜனை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்.
'மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பழைய கம்பத்திற்கு மாற்றாக, புதிய மின் கம்பம் அமைப்பதாக இருந்தால் மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி விட்டு தான் பணியை மேற்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளார். இதையடுத்து மின் ஊழியர்கள் மின் கம்பம் அமைக்கும் பணியை நிறுத்தி விட்டனர்.
இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகர்ப்பகுதியில் சேதம் அடைந்த மின் கம்பத்தை கண்டறிந்தால், உடனடியாக அதை அகற்றி புதிய கம்பம் நடுவோம். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் தங்களிடம் அனுமதி பெற வேண்டும் என கூறுவதால், புதிய கம்பம் அமைக்கும் பணி இனி தாமதமாகும்' என்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் உலகநாதன் கூறியதாவது:மின் வாரியத்தினர் புதிய மின் கம்பம் அமைக்கும்போது நிலத்தடியில் செல்லும் குடிநீர் குழாயை உடைத்து விடுகின்றனர். குடிநீர் வீணாக செல்லும்போது வார்டு கவுன்சிலர்கள் எங்களிடம் தான் கேள்வி கேட்கின்றனர். இதனால், மின் கம்பம் அமைக்கும்போது எங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என, கூறினேன். இதில் என்ன தவறு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X