காஞ்சி மாநகராட்சி இணையத்தில் திருநெல்வேலி 'லோகோ'

Added : செப் 23, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நிலவும் அன்றாட பிரச்னைகளான, கொசுத்தொல்லை, கழிப்பறை பராமரிப்பு, துாய்மை பணி, பாதாள சாக்கடை கழிவுநீர், தெரு மின் விளக்கு போன்ற புகார்களுக்கு, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக, 18004252801 என்ற எண்ணை, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. மேலும், grievance.kancheepuramcorporation.in என்ற மாநகராட்சியின் புதிய இணையதளமும் துவங்கப்பட்டது. இந்த இணையதளத்திலும்,
காஞ்சி மாநகராட்சி இணையத்தில் திருநெல்வேலி 'லோகோ'

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், நிலவும் அன்றாட பிரச்னைகளான, கொசுத்தொல்லை, கழிப்பறை பராமரிப்பு, துாய்மை பணி, பாதாள சாக்கடை கழிவுநீர், தெரு மின் விளக்கு போன்ற புகார்களுக்கு, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக, 18004252801 என்ற எண்ணை, மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. மேலும், grievance.kancheepuramcorporation.in என்ற மாநகராட்சியின் புதிய இணையதளமும் துவங்கப்பட்டது.
இந்த இணையதளத்திலும், பொதுமக்கள் தங்களின் புகார்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. புதிதாக துவங்கப்பட்ட இந்த இணையதளத்தின் முகப்பு பக்கத்தில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பதிலாக, திருநெல்வேலி மாநகராட்சியின் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் அனைத்து தகவலும் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழில் புகார் அளிக்க ஏதுவாக, இணையதளம் முழுதும் தமிழில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X