கனடா செல்வோருக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Added : செப் 23, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி :'மேற்படிப்பு மற்றும் வேலைக்காக கனடா செல்லும் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் குற்றங்களில் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:உயர் கல்வி மற்றும் வேலைக்காக வட அமெரிக்க நாடான கனடா செல்லும் அங்கு வசிக்கும்இந்தியர்கள்
 கனடா , மத்திய அரசு , வெளியுறவுத்துறை

புதுடில்லி :'மேற்படிப்பு மற்றும் வேலைக்காக கனடா செல்லும் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் குற்றங்களில் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.



மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:உயர் கல்வி மற்றும் வேலைக்காக வட அமெரிக்க நாடான கனடா செல்லும் அங்கு வசிக்கும்இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிராந்திய வன்முறை மற்றும் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் குற்றங்களில் சிக்காமல் கவனமுடன் இருக்க வேண்டும்


latest tamil news


. ஏற்கனவே நடந்த இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து, கனடா நாட்டு உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது.

கனடா சென்றுள்ளவர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் ஒட்டாவா, டொரான்டோ, வான்கூவர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய துாதரகங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக துாதரகங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202209:33:00 IST Report Abuse
அப்புசாமி உலக நாடுகளிலேயே இந்தியாவிகிருந்து வெளிநாடுகளுக்கு குடியேறுபவர்களௌம், குடியேற நினைப்பவர்களும் தான் மிக அதிகம். நம்மை விட கேவலமான தாய்லாந்துக்கு பிறதுக்குக் கூட ரெடி. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட்டு வர்ராரு நரேந்திரர். ஜாதிப்பெயர் சொல்லி யாரையும் கூப்புட மாட்டேன்.
Rate this:
Cancel
24-செப்-202209:32:41 IST Report Abuse
அருணா தமிழகத்திலேயே கோயில்களுக்கு பாதுகாப்பு இல்லை
Rate this:
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
24-செப்-202207:15:50 IST Report Abuse
Siva Panchalingam நான் சுமார் 35 வருடமாக தற்போது கனடாவில், டொரோண்டோ நகர் பிராந்தியத்தில் வசிக்கும் ஒரு கனடிய தமிழ் பிரஜை. கனடாவில் எங்கேயாவது சில இடங்களில் ஏதேனும் சிறு சல சலப்பு என நடந்திருக்கலாம். ஆனால் இந்திய சமூகத்துக்கு எதிராக கிளர்ச்சி தொடங்கியதாக நாம் எதுவிதமான செய்தியும் இதுவரை நாம் கேள்விப்படவில்லை. இது ஒரு பல் தேசிய, பல் கலாச்சார நாடு. இந்தியர்களும், ஈழ தமிழர்களும் அரசியல் பிரதிநிதிகளாக மட்டுமல்லாது அதி உயர் பதவிகளிலும் உள்ளார்கள் . இன,மத பாகுபாடுகள், துவேஷங்களினை காட்டினால் நாட்டின் சட்டங்களினால் தண்டிக்கப்படுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X