வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் மினி அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

Added : செப் 23, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் ஜூன் 3ம் தேதி தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழாய்வு பணிகள் துவங்கின.இந்த அகழாய்வில் 4,000 -- 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கறுப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய நாட்டில்
வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் மினி அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?

ஸ்ரீபெரும்புதுார்:காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் ஜூன் 3ம் தேதி தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழாய்வு பணிகள் துவங்கின.
இந்த அகழாய்வில் 4,000 -- 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் கறுப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், வண்ணம் பூசிய பானை ஓடுகள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள், ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பானை ஓடுகளான ஆம்போரா ஓடுகள் கண்டறியப்பட்டன.
இதுதவிர கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள், காதணிகள், வட்ட சில்லுகள், இரும்பு பொருட்கள் மற்றும் வளையல் துண்டுகள் மற்றும் 0.82 கிராம் உள்ள தங்கத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் இரண்டு என ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வடக்குப்பட்டில் உள்ள தனியார் பள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் ஆகழாய்வு நடக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு அறிந்து வருகின்றனர்.
இந்நிலையில், வடக்குப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி மேத்தா வசந்த் குமார், வடக்குப்பட்டு அகழாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து வடக்குப்பட்டில் சிறிய அலவிலான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இதனால், வடக்குப்பட்டிற்கு வரும் மக்கள் இந்த பழமையான பொருட்களை கண்டு ரசிக்க முடியும். அருங்காட்சியம் அமைவதற்கான இடம், கட்டடம் உள்ளிட்ட வசதிகளை ஊராட்சி மன்றம் சார்பில் ஏற்படுத்தி தருகிறோம் என தொல்லியல் துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார். தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X