ஸ்ரீபெரும்புதூர் மாவட்ட கல்வி அலுவலகம் தொடக்க கல்வி அலுவலகமாக மாறுகிறது

Added : செப் 23, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுாரில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகம், அக்டோபர் மாதம் முதல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகமாக மாற உள்ளது. தமிழக பள்ளி கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில், தொடக்க, நடுநிலை பள்ளிக்கு, தனி மாவட்ட அலுவலர்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தம்

காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுாரில் செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகம், அக்டோபர் மாதம் முதல் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகமாக மாற உள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில், தொடக்க, நடுநிலை பள்ளிக்கு, தனி மாவட்ட அலுவலர்களும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2018ம் ஆண்டு நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் இந்த நடைமுறை மாற்றப்பட்டது.
இதன்கீழ், மாவட்ட கல்வி அலுவலர் கட்டுப்பாட்டில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் கொண்டு வரப்பட்டன.மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கான அதிகாரம் முழுதும், மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டன. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு உரிய ஆவணங்களை சமர்பித்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். அனைத்து பள்ளிகள் கண்காணிப்பு செய்தல், அலுவல் பணிகளை மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ள குறைந்தப்பட்ச பணியாளர்களை கொண்டே மேற்கொள்ளப்பட்டது.இதனால், வேலைப்பளு அதிகரித்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
கல்வி அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிக்க பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், அரசிடம் வலியுறுத்தி வந்தனர். அதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. அவ்வகையில், மீண்டும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பணியிடம் உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கி செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மாவட்ட கல்வி அலுவலகம் வரும் அக்டோபர் மாதம் முதல், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகமாக செயல்பட உள்ளது. இதன் கீழ் தொடக்கப்பள்ளி மற்றும் நடு நிலைப்பள்ளிகள் அடங்கும். அதே போல், உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் காஞ்சி புரம் மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் வர உள்ளது. தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, தனி மாவட்ட கல்வி அலுவலகம் துவங்கி ஆய்வாளர் பணி யிடம் உருவாக்க உள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத காஞ்சிபுரம் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் மாவட்ட கல்வி அலுவலகம், இனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகமாக செயல்பட உள்ளது. அதேபோல், தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு, ஆய்வாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு, அலுவலகம் துவக்க உள்ளது. இதற்கு காஞ்சிபுரத்தில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X