வறண்டது லட்சுமிபுரம் அணைக்கட்டு

Added : செப் 23, 2022 | |
Advertisement
பொன்னேரி:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நாராயண வனம் பகுதியில் உள்ள சதாசிவகொண்டா மலைப்பகுதியில் ஆரணி ஆறு உருவாகிறது.அங்கிருந்து பிச்சாட்டூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்.ஆரணி, புதுவாயல், பொன்னேரி, தத்மஞ்சி, பிரளயம்பாக்கம் வழியாக, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு வங்காள விரிகுடா கடலில் முடிகிறது.ஆற்று நீரை சேமிக்க, தமிழக பகுதியில், இரு அணைக்கட்டுகள், 6 தடுப்பணைகள்
வறண்டது லட்சுமிபுரம் அணைக்கட்டு

பொன்னேரி:ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நாராயண வனம் பகுதியில் உள்ள சதாசிவகொண்டா மலைப்பகுதியில் ஆரணி ஆறு உருவாகிறது.அங்கிருந்து பிச்சாட்டூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்.ஆரணி, புதுவாயல், பொன்னேரி, தத்மஞ்சி, பிரளயம்பாக்கம் வழியாக, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு வங்காள விரிகுடா கடலில் முடிகிறது.
ஆற்று நீரை சேமிக்க, தமிழக பகுதியில், இரு அணைக்கட்டுகள், 6 தடுப்பணைகள் உள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பருவ மழையின்போது, ஆரணி ஆற்றில் உள்ள ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் அணைக்கட்டுகள் நிரம்பி வழிந்தன.லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து, அதிகபட்சமாக வினாடிக்கு, 30 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேறி கடலில் கலந்தது.
நவம்பர் மாதத்தில் துவங்கி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை அணைக்கட்டில் இருந்து மொத்தம், 16 டி.எம்.சி., தண்ணீர் வெளியேறி, பழவேற்காடு கடலில் சென்று கலந்தது. பின், அணைக்கட்டில் உபரிநீர் வெளியேறுவது படிப்படியாக குறைந்தது.கோடை காலம் துவங்கியதால், அணைக்கட்டு பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரும் படிப்படியாக குறைந்து, தற்போது நீரின்றி வறண்டு கிடக்கிறது.
அக்டோபர் மாதம் இறுதி வரை இதே நிலைதான் இருக்கும் எனவும், நவம்பர் மாத மழையை பொறுத்து அணைக்கட்டிற்கு நீர்வரத்து இருக்கும் எனவும், நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர். நீரின்றி வறண்டு கிடக்கும் லட்சுமிபுரம் அணைக்கட்டு, மழையை எதிர்நோக்கி காத்திருக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X