'ஸ்விக்கி' ஊதிய மாற்றம் ஊழியர்கள் நடைபயணம்

Added : செப் 23, 2022 | |
Advertisement
பூந்தமல்லி :உணவு டெலிவரி செய்யும், 'ஆன்லைன்' நிறுவனமான 'ஸ்விக்கி'யில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பணி புரிகின்றனர்.இவர்கள், பழைய ஊதிய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் இருந்து பெங்களூருவில் உள்ள 'ஸ்விக்கி' நிறுவனத்தின் தலைமை
'ஸ்விக்கி' ஊதிய மாற்றம் ஊழியர்கள் நடைபயணம்

பூந்தமல்லி :உணவு டெலிவரி செய்யும், 'ஆன்லைன்' நிறுவனமான 'ஸ்விக்கி'யில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பணி புரிகின்றனர்.இவர்கள், பழைய ஊதிய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சில நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் இருந்து பெங்களூருவில் உள்ள 'ஸ்விக்கி' நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை நோக்கி, நேற்று காலை 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நடை பயணத்தை துவக்கினர்.

அப்போது, அவர்கள் கூறியதாவது:திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம்.எங்களது ஊதியத்தை, புதிய திட்டத்தில் கொண்டுவர முயற்சி செய்கின்றனர். பழைய நடைமுறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி :வருகிறோம்.இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை. நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் பயனில்லை. இதனால், பெங்களூருவில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளரை சந்திக்க நடை பயணமாக பெங்களூரு செல்கிறோம். எங்களது கோரிக்கை ஏற்கவில்லை எனில், நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X