அந்நியச் செலாவணி கையிருப்பு தொடர் சரிவு: 2020 நிலையை நெருங்குகிறது!

Updated : செப் 23, 2022 | Added : செப் 23, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின் படி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 16 உடன் முடிவடைந்த வாரத்தில், 520 கோடி டாலர் குறைந்து 5456.5 கோடி டாலராக உள்ளது. இது அக்டோபர் 2, 2020க்குப் பிறகு மிகக் குறைந்த கையிருப்பு அளவாகும்.அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவும் காணப்படுகிறது.
ForexReserve, அந்நியச்செலாவணி, டாலர், ரூபாய், USD, INR

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின் படி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 16 உடன் முடிவடைந்த வாரத்தில், 520 கோடி டாலர் குறைந்து 5456.5 கோடி டாலராக உள்ளது. இது அக்டோபர் 2, 2020க்குப் பிறகு மிகக் குறைந்த கையிருப்பு அளவாகும்.

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவும் காணப்படுகிறது. செப்டம்பர் 16 அன்று வெளிநாட்டு கரன்சி சொத்துக்களின் மதிப்பு 470 கோடி டாலர்கள் வீழ்ந்து 4,840 கோடியானது. இதனால் கடந்த வாரம் 500 கோடி டாலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்தது. செப்., 23 அன்று டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.81.26 ஆக குறைந்துள்ளது.


latest tamil news


பிப்ரவரியில் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போரினால் 2022ல் ரூபாய் மதிப்பு கடுமையான அழுத்தத்தில் உள்ளது. ஜூலை மாதம் முதல் முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80ஐ தொட்டது. உலகளாவிய ரீதியில் விலைவாசி உயர்ந்து வருகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் உட்பட மத்திய வங்கிகள் பணவீக்க அழுத்தங்களைத் தணிக்க வட்டி விகிதங்களை தீவிரமாக உயர்த்தத் தொடங்கியுள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவை இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை அதிகரித்து அந்நியச் செலவாணி இருப்பை மோசமடையச் செய்துள்ளன.

ஜூலை மாதம் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.80ஐ தொட்ட சமயத்தில், ரூபாயின் வீழ்ச்சியைக் குறைக்க ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட 390 கோடி டாலரை அந்நிய செலாவணி சந்தையில் விற்றது. அந்தத் தொகை ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத அளவாகும். ரிசர்வ் வங்கி ரூபாயின் எக்ஸ்சேஞ்ச் மதிப்பை இலக்காகக் கொள்ளவில்லை என்கிறது. எனினும் அந்நிய செலாவணி சந்தையில் தலையிட்டு எக்ஸ்சேஞ் மதிப்பின் ஏற்ற இறக்கத்தை குறைக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-செப்-202219:35:46 IST Report Abuse
அப்புசாமி உலகநாடுகளில் நமது மதிப்பு கூடுகிறதாம்.
Rate this:
Cancel
What is this? - Thiruvaiyaru,இந்தியா
24-செப்-202217:33:46 IST Report Abuse
What is this? வாரக்கடனை தள்ளுபடி செய்யுங்கள்
Rate this:
Cancel
Priyan Vadanad - Madurai,இந்தியா
24-செப்-202216:12:28 IST Report Abuse
Priyan Vadanad பக்கத்து வீட்டுக்காரனை குறை சொல்லியே காலத்தை ஓட்டும் ஜென்மங்கள். காங்கிரஸ் ஆட்சியில், காங்கிரஸ் ஆட்சியில் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வந்தது, இப்போது எடுபடவில்லை. இப்போதெல்லாம் அந்த நாட்டில், இந்த நாட்டில் என்று பக்கத்து நாட்டை கைகாட்டி பிழைப்பு நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். கொஞ்சம் பொறுங்கள். எல்லாம் தெளிவாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X